உடுமலை நாராயண கவி தமிழில் தெருக்கூத்து போன்ற நாட்டார் மரபைச் சேர்ந்த அரங்ககலையில் இருந்தும், புராண கதாகாலட்சேபம் போன்ற கோயிற்கலைகளில் இருந்தும் மேடைநாடகம், திரைப்படம் ஆகிய புதியவகை அரங்ககலைகள் உருவாகி வந்த மாறுதல் காலகட்டத்தில் செயல்பட்டவர். பழைய மரபின் தொடர்ச்சியாக புதியவகைக் கலைகளுக்கு தேவையான பாடல்களை எழுதியவர் என்னும் வகையில் தமிழ் பொதுமக்கள் கலைகளின் மாற்றத்தை நிகழ்த்தியவர்களில் ஒருவர்.
தமிழ் விக்கி உடுமலை நாராயண கவி