எங்கே சுரா?

பித்தன் வருகை

ஜெ,

சற்று சலிப்புற்ற அசோகமித்திரனின் புகைப்படம், அதற்கு நேரெதிரான புதுமைப்பித்தனின் சிலை. நித்யா, அருண்மொழியின் படங்கள். உங்கள் மேசையில், புத்தக அலமாரியில் இதெல்லாம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதைப் படித்ததும் உடனே எழுந்த கேள்வி, உங்கள் அறையில் சுந்தர ராமசாமியின் புகைப்படம் இல்லையா?

தினம் தினம் எவ்வளவோ எழுத வேண்டும், எதை எதையோ கேட்டு மெயில் அனுப்ப வேண்டும் என்று தோன்றும், கடைசியில் மனத்தடையை மீறி கைகள் தட்டியது இந்தக் கேள்வியைத்தான்.

அன்புடன்

காயத்ரி.

அன்புள்ள காயத்ரி

எந்த படத்தையும் வேண்டுமென்றே கொண்டுவந்து வைக்கவில்லைஅப்படி அமைந்தது. அசோகமித்திரனின் படம் நாங்கள் சொல்புதிதில் அட்டையாக போட்டது. அதையே ஒருவர் லேமினேட் செய்து தந்தார். அதற்குமுன் நீண்டநாட்கள் ஒரு காந்தி படம் (ஆதிமூலம் கோட்டோவியம்) இருந்தது. அது பழுதாகி விட்டதனால் இப்போது காந்தி படம் இல்லை. 

ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி படங்கள் இல்லை. நாராயணகுரு படம்கூடத்தான் இல்லை. நித்ய சைதன்ய யதி படம் சில மாதங்களுக்கு முன்பு குக்கூ அமைப்பு திருவண்ணாமலையில் நடத்திய சமூகப்பணிப் பயிற்சி அமர்வுக்குச் சென்றபோது அவர்கள் அளித்தது. அதற்கு முன்பு இருக்கவில்லை.  அதை அஜிதனின் திருமணத்தை ஒட்டி சென்ற பிப்ரவரியில் வீட்டை சரி செய்தபோதுதான் அருண்மொழி மாட்டினாள். கீழே ஓர் அம்பேத்கர் சிலை (சந்துரு செய்தது) இருக்கிறது. ஒரு புத்தர், ஒரு தாராதேவி ஆகியவை உள்ளன. 

இப்போது பித்தனின் வருகை. எனக்குச் சிலைவழிபாடுகளில் ஈடுபாடில்லை. நினைவுநாட்கள் நினைவில் இருப்பதில்லை. இப்படி தற்செயலாக வந்து அமைகையில் அதில் ஒரு அறியமுடியாத நோக்கம் இருப்பதாக ஓர் எண்ணம்

ஜெ 

முந்தைய கட்டுரைWhat is the use of learning? 
அடுத்த கட்டுரைவேதாந்தம்