அழைப்பு- கடிதம்

அழைப்பு (சிறுகதை)

ஜெ, அழைப்பு சிறுகதை படித்தேன். உடனே தோன்றிய எண்ணங்களை தொகுக்க முயன்றேன் அது இவ்வாறு வந்தது.

இந்த கதை கூற வருவது இவற்றில் ஒன்றாக இருக்கலாம்!

  • அழிவின்மையின் மேல் மனிதர்களின் விழைவும் பயமும்.
  • தன்னுணர்வு இல்லாத அழிவின்மையின் நிலை –அதாவது இங்கிருக்கும் கல் போன்றவை, உயிரினங்களின் காலத்துடன் ஒப்பிட அழிவற்றவை. அவ்வாறு மாறுவதன் அவஸ்தை அல்லது பேரழிவு.
  • உணரும் திறனை மிகக் குறுகிய எல்லைக்குள் மட்டும் இருத்தி, பிற தளங்களில் அதை மரத்துபோக செய்து பாறைகள் போன்று இருக்கும் மனிதர்களை காணும்போது அல்லது நாம் அவ்வாறு இருப்பதை அறியும்போது அடையும் துயர்
  • உணரும் திறனை அழிக்கும் நிலைக்கு மனிதர்களை இழுத்து மூழ்கடிக்க, அவர்களை சூழ்ந்திருப்பவற்றிலிருந்து வந்து கொண்டிருக்கும் புற அழைப்புகளும் அதனால் தூண்டப்படும் அக அழைப்பும்.

மேலதிகமாக எண்ணங்களை பலதளங்களில் இக்கதை தூண்டுகிறதுஇதை படிக்கும்போது இமைக்கணம் நாவலின் முதல் பகுதியின் தியானகனும் பிரபாவனும் நினைவுக்கு வந்தார்கள்அதை எடுத்துப்படித்து விட்டு மீண்டும் ஒருமுறை ‘அழைப்பு’ படித்தேன்பல எண்ணங்கள்ஏனோ தெரியவில்லைஈஸோவாஸ்ய உபநிஷத்தின் பதினொன்றாவது பாடலின் சாரம் நினைவுக்கு வந்ததுஅதையும் ஒருமுறை படித்து  பாடலை நினைவுப்படுத்திக்கொண்டேன்.

அறிவையும் அறிவின்மையையும் ஒருங்குணர்ந்தவனே

அறியாமையால் சாவை கடந்து

அறிவால் அமுதத்தை அருந்துகிறான்.

முழுமையறிவு வேண்டுமென்றால் தன்னிலையை இழக்க தயாராக வேண்டும்அதே நேரத்தில் தன்னிலை இல்லை என்றால் அறிதலும் இல்லைவாழ்வும் இல்லைஇந்த முரண்தான் அத்வைதம்விஷிஷ்டாத்தவைதம்த்வைதம் ஆகிய வெவ்வேறு தரிசனங்கள் ஒரே வேதாந்தத்திலிருந்து உருவாகியதற்கான அழைப்பை விடுத்திருக்கலாம்.

உடல் அழியும்போது தன்னுணர்வும் அழிந்து விடும். எனவே மரணமின்மை என்பது தன்னுணர்வுடன் பிரபஞ்ச உணர்வை அடைந்து, அந்த நிலையில் தன்னுணர்வை இழந்து பிரபஞ்சத்தில் கலந்து விடுவது என்பதுதானே. அதாவது, “அழைப்புகதையில் வரும் சிந்தனையும் நினைவுகளையும் கனவுகளையும் தன்னுணர்வையும் இழந்த நிலை. அதாவது நம் மரபு இறுதி நிலை என வகுத்திருக்கும் நிலை. எனில் இக்கதை பேசுவது, நாம் எவ்வளவு விரும்பினாலும் முயன்றாலும் சென்றடையும் தூரத்தில் இருந்தாலும், நமக்குள் எழும் அதற்கு எதிரான அழைப்பைப் பற்றியா? அல்லது அனைத்து பயங்களையும் ஆசைகளையும் வாழ்வையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையில் தன்னுணர்வை முற்றாக இழந்து எனவே அழிந்து போவதற்காக எழும் அழைப்பையா?

அகிலன்

அழைப்பு – கடிதங்கள்

முந்தைய கட்டுரைWhy not Astrology?
அடுத்த கட்டுரைகமலாத்மானந்தர்