அழைப்பு- கடிதம்

அழைப்பு (சிறுகதை)

வணக்கம் ஜெ

தமிழ் விக்கியில் சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் வேதாந்தம் பற்றிய பதிவுகளின் தொடர்ச்சியாக இச்சிறுகதையை பார்கிறேன்.
மனித அறிவில் இருந்து தொடங்கி பிரபஞ்சத்தை விளக்குவது என்பதற்கு மாறாக பிரபஞ்சத்தில் பூமி என்பதில் தொடங்கி மனித மனதின் நான்கு நிலைகளை பற்றி கதை குவிகிறது. முற்றிலும் உரையாடலால் சொல்லப்பட்டிருக்கும் கதை. உபநிஷடம், சாக்ரட்டிக் டயலாக், catechism, என அறிவின் நடை.
கவிதை நம் ஆழ்மனதில் புதைகொள்கிறது. ஒரு கவிதையை வாசித்து சில நாட்கள் அது நம் நினைவிலேயே இருக்காது. எப்போதோ ஒரு தருணத்தில் அது சட்டென நினைவில் எழுந்து இக்கவிதை இப்போ வரை அதே சந்தத்துடன் நியாபகம் இருக்கிறதா என் வியக்க செய்யும். அவ்வாறு இன்று காலை என்னுள் எழுந்த வரிகள் ஹேம்லட்டின் வரிகள்.
Who would fardels bear,
To grunt and sweat under a weary life,
But that the dread of something after death, The undiscovered country from whose bourn No traveler returns, puzzles the will
And makes us rather bear those ills we have Than fly to others that we know not of?
Thus conscience does make cowards of us all, And thus the native hue of resolution
Is sicklied o’er with the pale cast of thought,
And enterprises of great pith and moment
With this regard their currents turn awry
And lose the name of action.
ஹேம்லட்டும் ஒருவேளை எல்சினோரின் மதில்சுவரில் அழிவின்மையின் எல்லையில் தான் நின்றுகொண்டிருந்தானோ?
ஓம் மற்றும் விஷ்ணு அக்கதவை திறக்காமல் விட்ட தருணம் (an enteprise of great pith and moment), ஒரு கதைசொல்லியின்(narrator) குரல் இவ்வரியை கூறியிருக்கும்- thus conscience does make cowards of us all.
அறிவின் எல்லையில் நின்று அழிவின்மையை அறிய முற்படும் அனைவரும் ஹேம்லட் தான்.
ஸ்ரீராம்
அன்புள்ள ஜெ
அழைப்பு கதையை ஒருவர் திமுக- பிஜெபி அரசியலுக்குள் கொண்டுசென்று ’விமர்சனம்’ எழுதியிருந்ததை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். இருவரும் கொஞ்சநேரம் சிரித்தோம். தமிழ்ச்சூழலுக்கு இந்தவகையான கதைகள் ஒருவகையால லக்சுரி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இதற்கும் நல்ல வாசகர்கள் சிலர் இருப்பார்கள். காலம், முடிவிலி, அழிவின்மை என்னும் pure – anti empirical ideas கொஞ்சமாவது ஏற்கனவே அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும் அதைச் சென்று சீண்டும் கதை இது. நீ immortality யை வைத்து முதுகுசொறிபவன் என்று ஒரு சினிமாவில் ஒரு வசனம் வரும். பழைய ஹங்கேரி சினிமா. எங்கே நிற்பது, எதுவரை பேசுவது என எல்லாருக்கும் தெரியும். கதவைத்திறப்பது எளிய விஷயமே அல்ல
ரவீந்திரன்
முந்தைய கட்டுரைஇரு கேள்விகள்
அடுத்த கட்டுரைபோர்வாள்