அண்ணா-கடிதங்கள்

அன்புள்ள திரு. ஜெயமோகன்,

கடந்த சில நாட்களில் அண்ணாவைப் பற்றிப் படித்த, கேட்ட விஷயங்களால் சற்றே மனக் கசப்புடன் எழுதுகிறேன்.

அண்ணாவைப் பற்றிய புகார்கள் வெறும் மதச்சார்பின்மையைப் பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ அல்ல. இந்தியர்களாக நாம் நம்மிடையே கட்டி வைத்த வேலிகள் அவை. பலரது விமர்சனக் கட்டுரைகளைப் படித்த பின் தோன்றியது – நமது ‘வழக்கமான குற்றவாளிகளை’, பழகி போன எரிச்சல்களை மீறி நம்மால் அண்ணாவைக் காண முடியவில்லை.

– காங்கிரசுக்கு சந்தேகமே இல்லை இவற்றின் பின்னால் ஆர் எஸ் எஸ் உள்ளது என்பதில் – அவர்களது பழக்கமான எரிச்சல்.

– அருந்ததி அம்மையாருக்கு எப்படியோ கார்பொரேட்டுகளின் கை தெரிகிறது – எங்கும் ஒரே பொருளைத் தேடினால் வரும் பார்வைக் கோளாறு போல இதுவும்.

– சுப்ரமணியம் சுவாமி அண்ணாவின் பின்னால் இடதுசாரிகளின் கையை பார்க்கின்றார். நக்ஸலைட்டுகள் என்கிறார் – அவருக்குப் பழக்கமான இலக்கு.

– தலித்துகளின் தலைவர்கள் அல்லது அப்படி என எண்ணிக் கொள்பவர்கள் அண்ணாவின் பின்னால் மனுவாத சதியைப் பார்க்கிறார்கள்.

– கிறித்துவ தலைவர்கள், இஸ்லாமிய இமாம்கள் அண்ணாவை வலது சாரி இந்துத்வவாதியாய் பார்க்கிறார்கள்.

– என்னை போன்றோர் காந்தியின் சாயலை பார்க்கின்றோம்.

இவை அனைத்தும் பார்ப்போருக்கு ஏற்ப பிம்பங்களாய் மட்டுமே இருக்கின்றன. அவ்வளவே. இவற்றை மீறியே அண்ணாவின் போராட்டம் நடக்கிறது.

65 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற பின்னும், ஒரு மாபெரும் போரில் ஒற்றைக் குரலை எழுப்ப முடியாமல் பிரிந்து கூடாரம் கூடாரமாக நிற்கிறோம். ஐம்பது ஆண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் மக்களை ஒரு உயர்ந்த நோக்கிற்கு ஒன்றுபட இயலாதவர்களாய் வைத்து அழகு பார்க்கிறது. அண்ணாவின் இயக்கம், ஒற்றுமை தேசியம் பற்றிய கேள்விகளைக் கேட்டு நம்முன் நிற்கிறது. பதில் இல்லை என்னிடம்.

அப்பழுக்கற்ற தலைவர் ஒருவரின் தியாகத்தின் முன்னால் நாம் நமது பழகிய மனக்குறுகல்களில் சிக்கி, சிறு அடையாளங்களில் அடங்கி, அவை பற்றிய சுய அச்சங்களில் உழல்வதே மேல் என்று இருக்கிறோம். ஒரு வேளை நமக்கு வாய்த்த இந்த அரசாங்கத்தை விட சிறந்த ஒரு அரசாங்கம் வாய்க்க நமக்கே முதலில் அருகதை இல்லை போலும்.

கோகுல்

பி. கு.
தங்கள் பதிவுகளை எனது தமிழ் படிக்க இயலாத நண்பர்களுக்காக மொழி பெயர்த்து உள்ளேன்.
http://www.thesabarmati.wordpress.com

பிரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

அண்ணா ஹசாரேவின் வெற்றி பற்றிய உங்கள் கருத்து, நூற்றுக்கு நூறு உண்மை,
வெகு ஜன மக்கள் மத்தியில் இருந்த அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கை வெளிக் கொணரப் பட்டுள்ளது. அது வெகுவிரைவில் ஜனநாயகத்தின் மீது ஒரு வெறுப்பாகக் கூட மாறக்கூடும், அதுவே இந்த ஊழல் பேர்வழிகளுக்கு ஒரு மரண பயத்தைக் கொடுக்கும்.

தமிழ் ராசாவினால் ஒரு நல்ல காரியம் கை கூடியுள்ளது, ஊழலின் அமானுஷ்ய அவதாரத்தை இந்திய தேசியவாதத்தை விரும்பும் மக்களுக்கு பகிரங்கப்படுத்தமுடிந்தது.

கொள்ளை அடித்துப் பாடம் கற்றுக் கொடுத்தான் கள்ளன் , கதவில்லா கஜானா இந்தியா என்று.

மறுபடியும் காந்திக்கு ஒரு அவசர அழைப்பிதழ் வரவழைத்தது அண்ணா ஹசாரே மட்டுமே,
மற்ற காங்கிரஸ்காரர்களுக்கு காந்தியின் முகவரி கூட மறந்து போய்விட்டது பாவம்.
தமிழ் அண்ணா ஆரம்பித்த கோலத்தை மஹராஷ்டிரா அண்ணா முடிக்கப் போகிறார்.

வெற்றி நிச்சயம்.

இன்று இல்லாவிட்டிலும் நாளை .

நன்றி

ரவிசந்திரன்.

அண்ணா ஹசாரே இணையதளம்

அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைகாங்கிரஸும் அண்ணாவும்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்