ஜெ, அருந்ததி ராய் பற்றி நீங்கள் எழுதியவற்றுக்கான பதில்களைப் பார்த்தீர்கள் அல்லவா? நீங்கள் அருந்ததி கேட்கும் ஒரு கேள்விக்குக்கூட பதில்களை எழுதவில்லை என்கிறார்களே?
ராம்
ராம்,
அருந்ததி ஒரு உருப்படியான கேள்வியைக்கூடக் கேட்கவில்லை- எல்லாமே ஊகங்கள், அவதூறுகள். அண்ணா ஹசாரே ’புதிதாகக் கிளம்பி வந்தவர்’ என்று ஒரு தேசிய ஊடகத்தில் உளறும் அளவுக்கு அறியாமையில் திளைப்பவரின் பேச்சுக்களிடம் என்ன விவாதம்?
நேற்று சி என் என் நிருபரின் செய்தி. இந்திய அறிவியக்கம் அண்ணாவுக்கு எதிராகக் கிளம்பிவிட்டதாம்.இந்தியாவின் ‘முன்னணி சமூகப்போராளியும் சிந்தனையாளருமான’ அருந்ததி எழுதிவிட்டாராம்! இனி என்ன செய்வார் அண்ணா என்ற வகையில். அருந்ததி யாரால் வளர்க்கப்படும் குரல்?
சாதாரணமாகவே அருந்ததியின் பிதற்றல்களுக்குப் பலர் பதில் சொல்லிவிட்டார்கள் http://clearvisor.wordpress.com/2011/08/23/why-i%E2%80%99d-rather-be-anna-than-arundhati/
ஜெ