விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
நள்ளிரவில் கண்களை மூடியபடி விசும்பிக்கொண்டே இருந்த குழந்தையை என்ன செய்தும் உறங்க வைக்க முடியவில்லை. விழித்துக் கொண்டதும் ஒவ்வொரு முகமாகப் பார்த்துவிட்டு தாயைத் தேடியது. பாட்டியும், இரண்டு சித்திகளும், மாமாவும் என யார் கையிலும் இருக்காமல் வாசற்கதவை பார்த்து போக வேண்டுமென அழுதது. சனிக்கிழமை அதிகாலையில் கதவைத் திறக்கும்போது மட்டும்தான் தாய் வருவாளென அதற்குத் தெரியவில்லை