வே.நி.சூர்யா, கடிதங்கள்

வெ.நி.சூர்யா தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

கவிதை குறித்த எந்த விருதுக்கும் தகுதியான கவி வே.நி.சூர்யா.அவருக்கு குமரகுருபரன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நன்றி.

அன்புடன்

சமயவேல்.

அன்புள்ள ஜெமோ

வே.நி.சூர்யா பொருத்தமான தேர்வு. மகிழ்ச்சி ஜெமோ. நான் ஒரு கட்டுரை அனுப்புகிறேன்

கண்டராதித்தன்

அன்புள்ள ஜெ

வே.நி.சூர்யாவுக்கு விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்வளிக்கிறது. எல்லா வகையிலும் தகுதியான கவிஞர். கவிதை எழுதுவது என்பது மட்டும் தகுதி அல்ல. பெருங்கவிஞர்கள் அப்படி ஓய்ந்த நேரத்தில் எழுதுபவர்கள் அல்ல. கவிதையை ஒரு அன்றாடமாகவும் வாழ்வாகவும் கொண்டவர்கள். கவிதையை ஓர் அறிவியக்கமாக நிகழ்த்துபவர்கள். வெ.நி.சூர்யா அத்தகையவர். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வக்குமார்

வே.நி.சூர்யா, கடிதங்கள்

முந்தைய கட்டுரைமருத்துவ முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைமுருகு சுந்தரம்