ஆ. வேலுப்பிள்ளை தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம், ஸ்வீடிஷ் ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மொழியியல், கல்வெட்டியல், தொல்லெழுத்தியல், சமயம், இலக்கியம், வரலாறு என்று பல்துறைகளிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். ’தமிழ் வரலாற்றிலக்கணம்’ என்ற பெயரில் பண்டைத் தமிழ் இலக்கணத்தை இன்றைய மொழியியல் கண்கொண்டு பார்க்கும் நூலை எழுதினார்.
ஆ.வேலுப்பிள்ளை
