முருகு சுந்தரம், பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞராக அறியப்பட்டார். மரபு, புதுக்கவிதைகள் என இரண்டு வகைமைகளிலும் கவிதைகள் எழுதினார். உலக இலக்கிய வாசிப்பின் விளைவால் தமிழ்க் கவிதைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டார். புதிய பார்வையும் சொல்லாடலும் கொண்ட கவிதைகளை எழுதினார். புரட்சிக் கருத்துக்களோடு இலக்கியச் செறிவும் அழகும் நயமும் கொண்ட கவிதைகளைப் படைத்தார்.
முருகு சுந்தரம்
