தெரிசனங்கோப்பு மருத்துவர் மகாதேவன் இன்று அதிகாலையில் காலமானார். மகாதேவன் திருவிதாங்கூர் அரசரால் ஏற்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயுர்வேத நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆயுர்வேதக் கல்லூரிகளில் அவை பாடநூல்களாக உள்ளன. ஆயுர்வேதக் கல்லூரிகளில் வருகைதரு பேராசிரியராக வகுப்புகள் எடுத்துவந்தார்.
தனிப்பட்ட முறையில் எனக்கு மிக அணுக்கமானவர். எம்.எஸ்.சிவசுப்ரமணியம் வழியாக எனக்கு அறிமுகமானார். நம் நண்பர்கள் பலருக்கு வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாக இருந்த நோய்களைத் தீர்த்துவைத்திருக்கிறார் – கிட்டத்தட்ட அற்புதகதைகள் போல சொல்லத்தக்க நிகழ்வுகள் அவை.
ஆனால் அவர் தன் உடலை பேணவே இல்லை. ஆயுர்வேதப் பயிற்சி வகுப்புகள், மருத்துவ முகாம்கள், நோயாளிகளைப் பார்த்தல் என முழுநேரமும் உச்சகட்ட செயல்வேகத்திலேயே இருந்தார்.
அஞ்சலி