கயிற்றரவு

இல்லாத ஒன்றை அறிபவன் மனமயக்கத்தால் அதை மெய்யாகவே இருப்பதாக உணரமுடியும் என்று காட்டுவதற்கு கயிற்றரவு என்னும் உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இருண்ட அறையில் கயிற்றைக் காண்பவன் அதை பாம்பென்றே அறிகிறான். அப்போது அது பாம்பாகவே இருக்கிறது. ஒளி வந்து அச்சம் விலகும்போது கயிறு தெரிகிறது, அப்போது பாம்பு இல்லாமலாகிவிடுகிறது. மாயையால் உருவாகும் யதார்த்தம் மாயை கலையும்போது மறைந்துவிடுகிறது.பொருள்வயமான உண்மை என ஏதும் இல்லாமலேயே வெறும் அறிதல் மட்டுமே ஒரு முழு யதார்த்தத்தையும் உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணம் இது

கயிற்றரவு

கயிற்றரவு
கயிற்றரவு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபொலிக! – கடிதம்
அடுத்த கட்டுரைஓர் அமரகாதல்