மல்லற்பேரியாற்றுப் புணை

ஓவியம்: ஷண்முகவேல்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

வெண்முரசின் பத்தொன்பதாவது நாவலான திசைதேர் வெள்ளம் முடித்தேன். புவியியல் மலையின் உச்சியிலிருந்து பிறப்பெடுக்கும் ஆறு பற்றி வாசிக்கும் போது அதன் பாதை என்பது அதன் இயல்பைப் பொறுத்து அது தேர்வதா அல்லது அது செல்லும் வழியிலுள்ள நிலப்பரப்பின் தன்மை பொறுத்து மாறுபடும் தன்மையதா என சிந்தித்ததுண்டு. இரண்டுமே என்று அறிவியல் சொல்கிறது. மேலும் புவியில் அகவயமாகவும் புறவயமாகவும் செயல்படும் விசைகள், வெப்பம், அழுத்தம் என பல காரணிகள் அதன் மேல் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. புவியின் சுழற்சி, புவி மீது நிலவு செலுத்தும் விசை, சூரியன் செலுத்தும் விசை என விசைகள் விரிந்து கொண்டே சென்றபோது பேரண்டம் என நாம் அறிந்து கொண்டவை வரை அவற்றை நீட்டிக் கொள்ள முடிந்தது.

விஷ்ணு புரத்திற்குப் பின் அறிய முடியாதவை, அறிதலுக்கு அப்பால் உள்ளவை பற்றிய பிற விசைகள் கூட அதன் மேல் இருப்பதாக உணர்ந்தேன். விளங்கிக் கொள்ள முடியாதவைகளின் தாக்கம் ஒன்று யாவற்றிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். இன்று அதற்கு அப்பால் விழி ஒளிர நின்றிருப்பது அந்த மாயப்புன்னகை என்று தோன்றுகிறது. இமையா பீலி விழி ஒன்று. அறிதலுக்கு அப்பால் நின்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒன்றின் விழி அது.

எல்லா அறிவினைப் போலவும் இந்த அறிவினை நான் மதிப்பிடவில்லை. ஞானவான், கலைஞனும், சிந்தனையாளர், பக்தியைக் கைக் கொண்டவனுமான அந்த அறிபவனை மற்ற அறிபனை விடவும் ஒருபடி மேல் வைத்தே நோக்குகிறேன். அறிதலுக்கு அப்பால் உள்ளது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஊடகமாக அமைபவன் இந்த அறிபவன் தான். ஆகையால் பிற அறிபவனை விடவும் மேலானவன். ஆனாலும் அதன் போதாமைகளை உணர்கிறேன்.

சின்னதும் பெரியதும்அறிந்ததும்அறியமுடியாததுமாக இத்தனை விசைகளின் தாக்கத்தை அறிந்து கொண்டபின்னும் ஆற்றின் திசையைத் தேர்வது இன்னது என்பது பற்றி திட்டவட்டமாக முடிவு செய்யமுடியவில்லைநீங்கள் இந்த நாவலில் திசையைத் தேர்ந்துவிட்ட வெள்ளத்தைக் காண்பித்திருக்கிறீர்கள்.

 மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது 

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

 நீர்வழிப் படூஉம் புணைபோல் 

என்ற புறநானூற்றுப் பாடலின்மல்லல் பேர்யாற்றுஎன்ற சொல் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது.

வெள்ளம் தன்னளவில் விசையானதுகண்மண் தெரியாமல் விழுந்து எழுந்து ஓடுவதுஅது செல்லும் நிலமோ எளிய விசைகளாலோ கட்டுப்படுத்த முடியாததுதன் திசையைத் தானே தேரும் வெள்ளம் பெருவிசை ஒன்றாலேயே கட்டுப்படுவதுஅல்லது அதுவும் இல்லை.

இந்த நாவலில் நுழைந்தபோதே அந்தக் கையறு நிலையை உணர்ந்தேன். இனி வெறுமே பார்க்க மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதுபோலஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கையும் அவ்வாறு தான் அமைகிறதுதேர்ந்து கொண்டதாக நினைத்தவை அனைத்தும்  கைக்கு  வந்தபின்  திசை நோக்கி  அடித்துச்  செல்லப்படுதல் மட்டுமேஎங்கும் திரும்பி நின்று நிதானித்து  மீள யோசிப்பதற்கு இங்கு இடமில்லை என்பது போலஒட்டுமொத்தமாக மனித வாழ்வே அவ்வாறு தான் உள்ளதோ என்ற மயக்கத்தை அடைந்தேன்.

இந்த நாவலில் இங்ஙனம்  தன் திசையைத்  தேர்ந்து கொண்ட  வெள்ளங்களைப்  பார்த்துக் கொண்டிருந்தேன் . வெறுமே பார்ப்பது என்பது சஞ்சயனின் விழிகளைக் கொண்டு பார்ப்பது தான். அந்த நிலைக்கு நீங்கள் ஏற்கனவே முந்தைய நாவல்களில் வாசகர்களைத் தயார்படுத்திவிட்டீர்கள். அவன் கண்கள் வழி குருஷேத்திரக் களத்தைக் காண்பது  என்பதே அப்புணையை சரியாகப் பார்ப்பது.  

மேலும் இளைய யாதவனை மிக அருகே என உணரும் நாவல் இது.”இங்கு நிகழ்வன அனைத்தையும் முன்னரே கடந்து அங்கு சென்று நின்று நாம் அங்கு செல்வதற்காக காத்திருக்கிறார்” என்ற சொற்களின் வழியும், ”அறவடிவன்அறமிலிஅறம்கடந்தோன்” என்பதன் வழியும் அவரைக் காண்பது களத்தின் மையத்தை எடுத்துரைக்கக்கூடியது.

அறமிலி” என்ற சொல் சற்று அதிரச் செய்வதுவேறு எவ்வாறு இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன்அற வடிவாகிஅதைக் கடந்தவன் அறமிலியாகத் தானே இருக்க முடியும்அறிபவனைப் பொறுத்துகாலத்தைப் பொறுத்து மாறுபடும் அறத்தைக் கடந்தவன்ஒரு காலகட்டத்தின் சிந்தனையாளர்கள் அப்படித்தான்இன்னொரு வரியையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம்.“அறமே வெல்லும்வெல்வதே அறம்வெல்லாதொழிந்தால் எந்த அறமும் பொருளற்றதே” என்பது.

இளைய யாதவரும், பார்த்தரும் இரு நாயர்களென களத்தில் நின்றிருக்கிறார்கள். சலிப்பில்லாதவர்கள்ஒருவன் விளையாட்டுப் பிள்ளைக்குரிய விழியையும்இளநகையையும் சூடியவன்இன்னொருவன் இலக்கடைய மின்னும் கூர்மையைக் கொண்டிருப்பவன்.

ஆனாலும் களத்தில் தன் செயல் வழியாக எழுந்து வரும் நாயகர்களாக அபிமன்யுவும்கடோத்கஜனும் நின்றிருந்தனர்அபிமன்யு தன்  தந்தையை  விட மேலும் கூர் கொண்டவன்  என்று தோன்றியதுமேலும்  கடந்தவன்அதை அடைவதற்குத் தேவையான கள்ளமின்மை அவனிடம் இருப்பதையே உணர்ந்தேன்அபிமன்யுகடோத்கஜன்அரவான் ஆகிய மூவரும் அர்ஜுனனைப் போலவோபீமனைப் போலவோ மிக நீண்ட பயணங்கள் செய்து அலைக்கழியவில்லைபீஷ்மரைப் போல பெருவாழ்வு கொள்ளவில்லைஇயல்பான  கள்ளமின்மையால் அவர்கள் வேறெவரை விடவும் எழுந்து வரும் சித்திரமும்அவர்கள் அசிரத்தையாக பெரியவற்றை எதிர்கொள்ளும் விதமும் உணர்வுப் பூர்வமாக அமைந்துள்ளது.

*

இத்தனைக்கு மத்தியிலும் ஒரு காதல் இங்கு நிகழ்கிறது. அசங்கனுக்கும் செளம்யைக்கும் இடையேயான காதல் அது. இரண்டே அத்தியாயங்களில் சொல்லப்பட்ட காதல் தான். ஆனால் அகவயமாக நீளமானது.

இலக்கியம் அளிக்கும் விடுதலை ஒன்று உள்ளது ஜெ. அது கற்பனை. ஏனெனில் உண்மை வாள் போல கூர்மையானது, மனசாட்சி அற்றது. நிகழ்ந்து முடிந்த கணம் உண்மை தன்னை உருமாற்றி யாவும் மாயையென கனவென நின்று விடுகிறது. அதிகமும் புனையப்பட்ட ஒன்றில் தான் வாழ்கிறோம் என்ற எண்ணமே இப்போதெல்லாம் வருகிறது. துக்கமும் மகிழ்ச்சியும் வலியும் யாவும் புனையப்பட்டே மிகையாகி நிற்கிறது. அப்படியிருக்க மனிதர்கள் ஏன் தாங்கள் வேண்டுவது போல புனைந்து கொண்டு இன்புறாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வியே முன் நிற்கிறது. நான் உட்பட.

இந்த கற்பனைத்தன்மையால் செளம்யையும் அசங்கனும் கொள்ளும் காதலும் காமமும் குருஷேத்திரப் போரை விட நீண்டதாக காட்சியளித்தது. இரவு தன்னளவிலேயே மிக நீண்டது என தோற்றம் கொண்டது. வெளிச்சம் தட்டையானது, அப்பட்டமானது, குறுகியது, ஒன்றுமற்றது, வெளித்தள்ளுவது. இருள் ஆழமானது நீண்டது அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது. அத்தகைய இரவை மட்டுமே துணைகொண்டு தங்களுக்குள் புனைந்து கொண்டு உறவு கொள்ளும் இரு உயிர்களால் அது மேலும் மேலும் நீள்கிறது. ஒன்றாகவே பல ஆண்டுகள் சேர்ந்து வாழும் இருவர் கூட இவ்வாறு வாழ்வதில்லை என்று மயக்குமளவான உறவு இது.

ஒருவருடன் அவ்வாறு பல்லாயிரம் நிகழ்த்தகவுகளில் வாழ முடிந்துவிட்டால் இந்தக் காதல்/உறவு எனும் விளையாட்டு சலிப்பு கொள்வதில்லை. பெரும்பாலும் இங்கு சலிப்பு கொண்டு அமைந்துவிடும் ஆட்களே பிறிதொன்றை நாடுகிறார்கள் அல்லது இருப்பதிலிருந்து பிரிந்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

புனைவுகள் வாசிப்பதும் எழுதுவது என்ன என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஜெ. பல்லாயிரம் வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க என்பது ஒரு பதில். எளிய பதில் தான். ஆனால் அதை உணரும் போது வரும் திகைப்பு அளப்பரியது. அதை இந்த இரு அத்தியாயங்களில் உணர்ந்தேன்.

*

மனம் அலை ஓய்ந்துவிட்டது போல உள்ளது. மிகவிரைந்து செல்லக்கூடிய ஒன்றின் அசைவின்மை அல்லது இன்மை தரும் அமைதி போல. திசைதேர்வெள்ளத்தின் இறுதியில் பீஷ்மரின் வீழ்ச்சியை அம்புப்படுகையைக் கண்ட அடுத்த கணம் கர்ணன் நினைவுக்கு வந்தான். அவனை எதிர்நோக்கியே கார்கடல் நாவலுக்குள் நுழைகிறேன்.

பிரேமையுடன்

ரம்யா.

முந்தைய கட்டுரைபித்து எனும் அறிதல் நிலை
அடுத்த கட்டுரைமகாதேவன், கடிதங்கள்