சைவ அறிஞரும், பேச்சாளருமான மரபின்மைந்தன் முத்தையா நடத்தும் சைவத் திருமுறைகளை அறிவதற்கும் உணர்வதற்குமான பயிற்சி வரும் மே மாதம் முதல்வாரம் 3,4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நிகழும். ஏற்கனவே நிகழ்ந்த பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு பெரிய அறிவனுபவமாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றனர்.
சைவத்திருமுறைகள் பக்தி- தத்துவம் ஆகியவை கொண்ட தமிழ் தொல்நூல்கள். அவற்றை உணர்வுரீதியாக பயில்வதற்கான வழிகாட்டிப் பயிற்சி இது. ஆனால் சமயச்சார்பு அற்றது. அவற்றை இலக்கியமாக அணுக விரும்புபவர்களும் பங்கெடுக்கலாம். அனைத்து மதத்தினரும் பங்கெடுக்கலாம். நவீன இலக்கிய வாசிப்பும், நவீனச் சிந்தனைகளில் பயிற்சியும் கொண்ட ஆசிரியரால் இளைய வாசகர்களுக்காக நடத்தப்படுவது
பங்கேற்பவர்கள் எழுதலாம்
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
முந்தைய நிகழ்வுகள், இடமிருப்பவை
நவீன மருத்துவம், அறிமுக முகாம்.
நவீன மேலை மருத்துவம் சார்ந்த ஓர் அறிமுக வகுப்பு. அறுவைசிகிழ்ச்சை நிபுணரும், மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான டாக்டர் மாரிராஜ் நடத்துகிறார்.
ஒரு சாமானியனுக்கு உடற்கூறியல், நோய்கள், மருத்துவத்தின் அடிப்படை முறைகள் பற்றிய அறிமுகம் அளிக்கும் வகுப்பு இது. பொதுவெளியில் பணியாற்றும் எவரும் அறிந்திருக்கவேண்டியது. ஒருவரின் வாழ்க்கைநோக்கையே மாற்றியமைக்கும் பயிற்சி.
Date ஏப்ரல் 5,6 மற்றும் 7
இந்திய தத்துவம் இரண்டாம்நிலை வகுப்புகள்
(முதல் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும்)
ஏப்ரல் 12, 13, 14 தேதிகள்
காட்சிக்கலைப் பயிற்சி
ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுக வகுப்புகள் ஏப்ரல் ஏப்ரல் 19 20 மற்றும் 21 தேதிகளில் ஈரோட்டை அடுத்த மலைத்தங்குமிடத்தில் நிகழும்.
மூன்றாம் நிலை தத்துவப் பயிற்சி
முதல் இரு தத்துவப் பயிற்சிகளை முடித்தவர்களுக்குரிய மூன்றாம்நிலைப் பயிற்சி. நாள் ஏப்ரல் 26 27 மற்றும் 28
இந்திய தத்துவம் மூன்றாம் வகுப்பு
வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
மே மாதம் 7,8 தேதிகளில் ( செவ்வாய் புதன் இரண்டு நாட்கள்) இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உதவும் கவனக்குவிப்பு- ஊழ்கப்பயிற்சி. தில்லை செந்தில் பிரபு.
மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. அவர்களின் பயிற்சிநிலை, அதன் தொடர்ச்சி ஆகியவற்றை ஆசிரியர் பரிசீலிப்பார்
மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஆண்டுதோறும் நிகழும் குருநித்யா இலக்கிய விழா.