பேராசிரியர் மு.இளங்கோவனின் இணையப்பக்கம் தமிழாய்வாளர்களுக்கு ஒரு பெரிய களஞ்சியம் போல. தமிழறிஞர்களை தேடிச்சென்று சந்தித்து ஆவணப்படுத்தி வருகிறார். அதில் அண்மையில் தா.வே.வீராச்சாமி பற்றிய பதிவு குறிப்பிடத்தக்கது. எனக்கும் தா.வே.வீராச்சாமிக்கும் ஒரு தொடர்பு உண்டு. என் முதல்நூல், முதல் நாவல் ரப்பர் 1990ல் அகிலன் நினைவு விருதுக்குத் தேர்வானபோது அதன் நடுவர்களாக இருந்தவர்கள் கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி மற்றும் தா.வே.வீராச்சாமி ஆகியோர்தான். தா.வே.வீராச்சாமி எழுதிய நீண்ட முன்னுரையுடன்தான் அந்நாவல் வெளிவந்தது