நீதிபதி சந்துரு – கடிதங்கள்

மனித உரிமை – ஓர் வரலாற்றாவணம்

அன்புள்ள ஜெ,

சர்ச்சைகள் நடுவே காணாமல்போன ஒன்று, நீதிபதி சந்துரு பற்றி நீங்கள் எழுதிய நீண்ட நூல்மதிப்புரை. ஒரு பெரிய வரலாற்றையே அந்நூலில் காணலாம். அந்த வரலாற்றின் சுருக்கமான ஒரு அறிமுகம் அந்தக் குறிப்பில் இருந்தது. தமிழகத்தில் சென்ற ஐம்பதாண்டுகளில் எப்படி மனித உரிமை இயக்கம் உருவாகி பலவகையான சட்டச்சீர்திருத்தங்கள் வழியாகவும் தீர்ப்புகள் வழியாகவும் இன்றைக்கு ஒரு பொது விழுமியமாக நிலைகொண்டது, என்றும் அதில் சந்துரு அவர்களுக்கு இருக்கும் பங்களிப்பென்ன என்றும் கூறியிருந்தீர்கள். வட இந்தியா சென்றால்தெரியும், தமிழகத்தில் மனித உரிமைகள் எந்த நிலையில் உள்ளன என்று. நாமும் ஐம்பதாண்டுக்கு முன்பு அப்படித்தான் இருந்தோம்.

மனித உரிமைகளுக்கு எதிரான பிரச்சாரம்தான் சினிமா வழியாக நடந்து வருகிறது. போலீஸை குளோரிஃபை செய்யும் சினிமாக்கள்தான் விஜய்காந்த் முதலியவர்கள் எடுத்தவை. வெற்றிமாறன் அந்த பார்வையை மாற்றியமைத்தவர்.

செல்வக்குமார்

அன்புள்ள ஜெ

நீதிபதி சந்துரு அவர்களைப் பற்றிய கட்டுரை சிறப்பு. அவருடைய பங்களிப்பை சொல்லும் அதே சமயம் அவர் நீதிமன்றங்கள் எப்படி உண்மையில் செயலற்றவையாக இருக்கின்றன என்பதை அந்நூலில் சொல்லாமலேயே இருந்துவிட்டார் என்றும் நீதிமன்றங்கள் செயலற்றிருப்பதனால்தான் உண்மையில் இங்கே மக்கள் போலீஸை போற்றுகிறார்கள் என்றும் சொல்லியிருந்தீர்கள் முழுக்க முழுக்க உண்மை அது

சந்திரப்பிரகாஷ்

முந்தைய கட்டுரைசைவத் திருமுறைப் பயிற்சி
அடுத்த கட்டுரைகொரியாவில் ஒரு சந்திப்பு