நாகங்கள் முதல் நாகங்கள் வரை

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

பால மித்ரா, அம்புலி மாமா பின்னர் அமர் சித்திரக் கதை வரிசையிலும் படித்து தெரிந்து கொண்ட மகா பாரதம், பின்பு தொலைக்காட்சியில் நாடகமாக பார்த்து புரிந்து கொண்டதை மீண்டும் படிக்க வேண்டும் என்று முதலில் தோன்றவில்லை.

வாசிப்பை நேசிப்போம் குழுவின் facebook page ல் இதனை பார்த்த பொழுது சரி ஒரு மீள் வாசிப்பு செய்வோம் என்று எடுத்தது.

Wow! இது ஒரு அற்புத பயணமாக சென்று கொண்டு இருக்கிறது.மஹாபாரதத்தின் குருஷேத்ர போர் முடிந்த பின் அபிமன்யுவின் பேரன் ஜனமேஜயன் வாழ்க்கையில் தொடங்கும் கதை அவர் தந்தை பரீட்சித் பிறந்த விதம் என்று தொடர்ந்து அவரின் பல தலைமுறைகளுக்கு முன்னால் சென்று ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் விவரிக்கிறது அவர்களின் பிறப்பு, பொறுப்பு, சோகங்கள் என்று படிப்பவர்களுக்கும் அதனை கடத்திக் கொண்டே செல்கிறது.

வெண்முரசு முதல் ஐந்து அத்தியாயங்கள் படித்த பொழுதே புரிந்து விட்டது. இது ஒரு மாறுபட்ட dark noir என்று.குளிர், இருள், பாம்புகள் என்று வரும் முதல் ஐந்து அத்தியாயங்களில் நிறைந்த வர்ணனைகளும் குறைவான வசனங்களும் ஒரு அற்புதமான prologue.

அற்புதமான வசனங்கள் மற்றும் தத்துவங்கள் கதை முழுவதும் தேவையான இடத்தில் தூவி விடப்பட்டு உள்ளன.

“இங்கே விதிகளெல்லாம் வலிமையின்படியே தீர்மானிக்கப் படுகின்றன”

விசித்திரவீரியன் சத்யவதியிடம் கேட்கும் கேள்வி : “அன்னையே, உங்களுக்கு நான் யார்?சந்தனுவின் வம்சத்தை ஏற்றிச்செல்லும் வாகனம் மட்டும்தானா?” –

“Spare” என்ற பெயரில் சமீபத்தில் Prince Harry எழுதிய புத்தகம் ஞாபகம் வந்தது.

சத்யவதியின் பீஷ்மரை மனமாற்றம் செய்ய வைக்கும் திறமை. அதனை நன்கு அறிந்து இருந்தும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் பீஷ்மரின் பெருந்தன்மை.

கதையினூடாக பிணைந்து வரும் சத்தியவான் சாவித்திரி போன்ற கிளைக்கதைகள்.

தீரா நதியினை ஒரு பெரிய பாம்பாக உருவகப் படுத்தி படிப்பவர்களை இரசிக்க வைக்கும் கவித்துவம்.

நேர்க் கோட்டில் செல்லாமல் non-linear வகையில் ஜெய மோகன் அவர்கள் கதை சொன்ன விதம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு அத்தியாயமும் முந்தைய அத்தியாத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறு ஒரு சம்பவத்தின் வர்ணனையுடன் ஆரம்பித்ததுவே புதுமையாக இருந்தது.

இருளில் பாம்புகளுடன் தொடங்கி இருளிலேயே முடிந்த முதற்கனல் மனதில் நிறைவை கொடுத்தது.

மகேஷ்குமார்

வாசிப்பை நேசிப்போம் 

வெண்முரசுபதிவுகள்_முதற்கனல்

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை, 69
அடுத்த கட்டுரைஅன்பெனும் வெளி, கடிதம்