கீரனூர் ஜாகீர்ராஜா- மனைவியின் உரை

இலக்கிய விழாக்களில் பலசமயம் எல்லா பேச்சுகளுமே எதிர்பார்த்த மாதிரி அமையும். சிலசமயம் எல்லா பேச்சுக்களுமே புதியவையாக நிகழும். அரிதாகவே ஓர் ஆச்சரியம் நிகழ்கிறது. நற்றுணை அமைப்பு சென்னையில் ஒருங்கிணைத்த கீரனூர் ஜாகீர்ராஜா விழாவில் அவருடைய மனைவி ராஜி என்னும் சல்மாவின் உரை அப்படி ஓர் இனிய வியப்பாக இருந்தது என்கிறார்கள்

அதைப்பற்றி அந்திமழை இணையதளம் இப்படி குறிப்பிடுகிறது “ஓர் எழுத்தாளருக்கான விழாவில் அவரது மனைவியைப் பேச வைத்தார்கள் .அவரோ மேடை ஏறிப் பேசியவர் இல்லை.எனவே என்ன பேசுவாரோ என்று அவரது கணவரான எழுத்தாளர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.பேசி முடிக்கும் வரை எழுத்தாளரின் முகம் பதற்றத்தில் இருந்தது. இப்படி ஒரு சுவாரஸ்யமான தருணத்தை கீரனூர் ஜாகிர் ராஜாவின் படைப்புலகம் சார்ந்த விழாவில் பார்க்க முடிந்தது.”

அந்திமழை கட்டுரை


முந்தைய கட்டுரைசோனம் வாங்சுக்- ஒரு மாபெரும் போராட்டம்- கடிதம்
அடுத்த கட்டுரைதிலக பாமா