முதற்காட்டாளனும் காட்டாளத்தியும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல்களில் கிராதம் மற்றும் சொல் வளர்காடு எனது வாசிப்பின் மிகுந்த உழைப்பை கேட்பதுஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுது ஏதோ ஒன்று புதிதாகத் துலங்கும்

கடந்த வருடம் ஆலய கலை பயிற்சிக்காக  தாராசுரம் கோவில் சென்றது அங்குள்ள சிற்பங்களை பெரிய புராணத்துடன் சேர்ந்து படித்தது என்பது பெரும் பரவசத்தில் ஆழ்த்தியது.   முக்கியமாக ஆசிரியர் ஜெயக்குமார் மாதர்பிறை கண்ணியானை பாடிக் கொண்டே அந்த சிற்பங்களை காண்பித்தது என்பது மறக்க முடியாத அனுபவம்.

சென்ற வாரம் மறுபடியும் கிராதம்  புத்தகம் எடுத்து படித்துக் கொண்டிருந்தேன்.  Ch- 31இல்சரவிய்யம் என்னும் காட்டில் ஒரு ஆண் குயில் ”  படிக்கும் பொழுது தலையில் இருக்கும் நியூரான்கள் சரியான நியூரான் synapse தொடும் போது போது ஏற்படும் ஒரு அதிர்வவு ,ஆஹா என்ற ஒரு வியப்புமாதர்பிறை கண்ணியானை பதிகத்தை தான் உரையாக–  சிவசக்தி எழுந்தருள்வதாக உள்ளது. இதற்கு முன்பு அந்த புத்தகத்தை படித்திருந்தாலும் என்னால் அதை உள்வாங்க முடியவில்லை. உங்களுக்கும் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

இந்த முறை வாசிப்பில் பஞ்சபூதங்கள் விளக்கங்களும்  எனக்கு ஓரளவு புரிய ஆரம்பித்ததுமண்நீர் , ஒளி மூன்றும் இல்லாதது தான் ஆகாசமே என்றும் இம்மூன்றையும் தோற்றுவிக்க  வரும் அசைவே காற்று

இதன் அடிப்படையிலேயே மூன்று மத பிரிவுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன (சைவத்திற்கு ஒளிபிழம்பு, வைணவத்திற்கு நீர் ( பாற்கடல்) , சாக்தத்திற்கு பூமி தத்துவம்)

இதை ஒட்டி எனக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.

1. பஞ்சபூத கொள்கைகள் எல்லா  மதத்திலும் இருக்கின்றனவா?

2. சைவத்தில் இதற்கு அளித்த முக்கியம் மாதிரி மற்ற இடங்களில் அவ்வளவாக இல்லை என்று எனக்கு தோன்றியதுஇந்தப் புரிதல் சரியா தவறா

3. மிக முக்கியமானகாலம்”  காலன் என்கிற உருவகத்தை தவிர வேறு எதேனும் முறையில் விளக்கம் உள்ளதா?

நீங்கள் இதற்கு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன்,

 மீனாட்சி

காளி - நவீன கிராஃபிக்ஸ் வடிவம்
காளி – நவீன கிராஃபிக்ஸ் வடிவம்

அன்புள்ள மீனாட்சி,

கிராதம் நாவல் வேதங்கள் உருவான களத்தை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகளைச் சார்ந்து புனைவாக முன்வைக்கிறது. வேத முதல்வனாக சிவன் உமையுடன் தோன்றுகிறான்.

மகாபாரதம் அடிப்படையில் வைணவ படைப்புகிருஷ்ணன் அதன் மையம். ஆனால் அந்த சைவவைணவப் பிரிவினை பிற்காலத்தையது. மகாபாரதத்தில் மையமாக சிவன் வருவது பாசுபதம் அளிக்கும் பகுதியில்தான். ஆகவேதான் அந்தப் பகுதி கிராதார்ஜூனியம் போன்ற காவியநாடகங்களாகவும் பின்னர் கதகளி போன்ற பலவகை கலைநிகழ்வுகளாகவும் வந்துள்ளது. கிராதம் அந்த கதையில் நிறைவுறும் காவியநாவல். ஆகவே சைவத்தன்மை கொண்டுள்ளது.

பஞ்சபூதக் கொள்கை பலவடிவில் எல்லா இந்திய மதங்களிலும் உண்டு. சாங்கியத்தின் தொல்வடிம் போன்ற சிலவற்றில் நான்கு பூதங்கள்தான்ஆகாயம் இல்லை. இந்தியாவுக்கு வெளியே கிரேக்க தொல்மதத்திலும் பஞ்சபூதம், நான்கு பூதம் போன்ற கொள்கைகள் உள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைநீலக்கடல் வெண்பவளம்
அடுத்த கட்டுரைஇயற்கையின் நஞ்சு- கடிதம்