வணக்கம்! இல்லத்தில் இன்பம் பொங்கியிருக்கும் வேளையில், உங்கள் நலம் நலமே என்ற நம்பிக்கையுடனும், வாழ்த்துக்களுடனும் கடிதத்தை தொடங்குகிறேன்.
சென்ற ஞாயிற்றுகிழமை, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் பார்த்தேன். 3 வருடங்களுக்கு முன்னால் நான் அக்னிபிரவேசம் வாசித்தபோதும், நாவலை வாசித்தபோதும் இருந்த மனநிலைகளில் இருந்து ஒரு மாறுதலை உணரந்தேன். படம் முடிந்த பின்பு என்னுள் நாவல் மீண்டும் ஒரு ஓட்டம் நிகழ்த்தியது. சில பக்கங்களை எடுத்து புரட்டலானேன். என்னை தொகுத்துக் கொள்ள நினைத்து ஒரு கட்டுரை எழுதினேன்.
சில நிமிடங்களுக்கு முன்னால், May 12, 2017 அன்று, நீங்கள் காலச்சுவடு வெளியிட்ட செம்பதிப்பை முன்னிட்டு எழுதிய கட்டுரையை வாசித்தேன். அது எனக்கு மற்றுமொரு திறப்பை அளித்தது. அவ்வப்போது கங்காவுடன் காரிலும், மழையிலும் அலைந்து கொண்டிருந்த நான், என் கட்டுரைக்கு பின் அதிலிருந்து சற்று ஓய்வேன் என்று நினைத்தேன். உங்கள் கட்டுரையை வாசி்த்தபின்பு மீண்டும் அவள் உலகிலேயே இருக்கிறேன்.
நான் எழுதியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
https://ramyamanokaran.blogspot.com/2024/03/blog-post_6.html
நன்றி,
ரம்யா மனோகரன்