ஒரு வருகை -கடிதம்

மருபூமி வாங்க

மருபூமி மின்னூல் வாங்க

மனித குமாரனைபின் தொடரும் நிழலின் குரலில்மிகவும் நெகிழ்ச்சியான ஒரு தருணத்தில் கண்டு கண்ணீர்விட்ட வாசகன் நான். ஆலயங்களில் கடவுளாக அவரை காணும்போதும், பைபிள் வாக்கியங்களை வாசிக்கும்போதும் சிகரத்துக்கு நிகரான அந்த ஆளுமைதான் எனக்கு காட்சி அளிப்பார். 

அஜிதனின்ஜஸ்டினும் நியாய தீர்ப்பும்வாசித்த பிறகு அதே நெகிழ்வை வேறு வகையில் அடைந்தேன். முற்றிலும் சலித்த, கடுகடுப்பான, நகர்க்கோயில் தமிழ் பேசும் தேவமைந்தன் இன்று இன்னும் அணுக்கராக தோற்றமளிக்கிறார். ‘திருக்காயம் கொண்டு தழும்பேறியகைகளால் ஜஸ்டினை அறைந்துபோல உள்ள, அழுவுகாம் பாருஎன்கிற ஏசுவும் கண்ணீரைத்தான் வரவைக்கிறார்சிறு புன்னகையுடன் கலந்து. 

ஜஸ்டினுக்கு சிறுவயதிலே இப்படி ஒருபளார்விட்டு கண்டிக்கும் தந்தை இருந்திருந்தால் அப்படி கொலையாளியாக மாறி இருப்பானாஎன்ற எண்ணம் தோன்றியது. சினிமா செண்டிமெண்ட் தனமான யோசனை தான்இருந்தாலும் அது வாசகனாக முழுமை உணர்வை அளிக்கிறது.

நிலைவிழி‘, ‘வழித்துணை‘ – இரண்டும் ஒரு திரை வடிவத்துக்கு உரிய கச்சிதமான தொடக்கமும் முடிவும் உள்ள கதைகள். அதைவிட, எனக்கு வியப்பு அளித்தது கதைமாந்தரை ஜீவனுடன் வடித்த விதம்.  நான் வாசிக்கும் அஜிதனின் முதல் புத்தகம் இது. ‘மைத்ரி‘, ‘அல் கிஸாகிண்டலில் தரவிறக்கம் செய்ததோடுபிறகு படிக்கலாம்என்று விட்டுவிட்டேன். விஷ்ணுபுரம் விழாவில் அஜிதனின் கையொப்பத்துடன் வாங்கிய இந்த புத்தகத்தை அப்படி விட முடியவில்லை. ஒரு நற்பொழுதில் சட்டென்று தொடங்கி முடித்து விட்டேன். 

எந்த வகையில் பார்த்தாலும் தமிழ் எழுத்துலகிற்கு ஒரு சிறந்த நல் வரவுதான் இவர். கதை சொல்லல் முறையாகட்டும், கதைமாந்தர் வடிவமைப்பாகட்டும், மிகவும் இயல்பாக கொட்டும் மொழியாகட்டும்முதிர்ச்சியும், துள்ளலும் ஒன்று சேர்ந்த எழுத்தாளர். உருவாக இருக்கும் ஒரு பெரும்படைப்பாளியின் இன்றையமைக்ரோ காஸம்‘ (micro cosm) தான் இந்த புத்தகம் என்று பட்டது.

உங்கள் பிள்ளை என்பதாலேயே எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்களோ என்று நினைக்கிறேன். இதே ஒரு இளம் எழுத்தாளர்வெளியில்இருந்து வந்திருந்தால்தமிழ் வாசக உலகம் இன்னும் பெரிதாக கொண்டாடி இருக்கும் என்று படுகிறது. இந்த அளவுக்கு கதைமாந்தர்களை உயிர்ப்புடன்படைக்கும்  இளம் எழுத்தாளர்கள் அபூர்வம்தான். ‘ஜஸ்டினும்…’, ‘நிலைவிழி‘, வழித்துணை, போர்க் ரோஸ்ட்இந்த கதைகளில் உள்ள அஜிதன்சட்டென்றுஒரு குழந்தை இறப்பு பாடல்‘, ‘முடியாட்டம்வந்ததும் வேறு ஒருவராக மாறுகிறார். திடீரென ஒரு முதிர்ச்சி, தீவிரம். இல்லை, இதுதான் அசலான தன்மையோ?

அஜிதனை விஷ்ணுபுரம் விழாக்களில் பார்த்து ஒருஹாய்சொன்னபோதும்சற்று நெருங்கி பார்த்ததுதிரைப்பட ரசனைமுகாமில் தான். ரஃபிக் உடன் இவரும் எங்களுக்கு ஆசிரியராக பாடம் எடுத்தார். வகுப்பை ஆரம்பிக்கும் முன்பு ஒரு சிறு தயக்கம், சிறுவர்களைப்போல் லேசான கூச்சத்துடன் பேச்சை தொடங்குவார். அசந்தர்பமான குறுக்கிடல் வந்தால் சிறு எரிச்சலுடன் அடக்கிசொல்லவரும் விஷயத்துக்குள் புகுந்து விடுவார். விசை கூடும்போது முற்றிலும் வேறொவராக மாறி விடுவார். மிகவும் ஆழமான விஷயத்தையும் நுட்பமான, கவித்துவமான சொற்றோடருடன் சுலபமாக சொல்லி செல்வது வியப்பாக இருக்கும். தான் கண்ட ஆழங்களை மற்றவர்களுக்கு சுட்டிக்காட்டும் அந்த தன்மை இந்த கதைகள் எல்லாவற்றிலும் உண்டு.

ஆயிரத்து முன்னூற்றுப்பதினான்கு கப்பல்கள்பற்றி முன்னுரையிலே பஷீரின் தாக்கத்தை பற்றி அஜிதன் சொல்லி இருந்தாலும்பஷீரை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், எனக்கு இந்த குறுநாவல் அஜிதனின் பார்வையில் ஜெயமோகனை காணும் உவகையை அளித்தது. பிள்ளைகளை எவ்வளவு–  இயல்பாக வளர்க்கும் தந்தை! நம் ஒவ்வொரு வளர்ச்சியும், முதிர்ச்சியும் ஒரு மறுபிறப்புதான் என்கிறபோதுஅந்த பிறப்புக்கு முன் நடந்தேறுவது ஒரு மரணம்தானே. அந்த வகையில் இதுவும் ஒரு மரணத்தின் கதைதான். அஜிதன் எனும் சிறுபிள்ளை முன்பதின் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் கதை. ஒரு இளம் எழுத்தாளரின் முதல் கதை தொகுப்பிலேயே வரும் தன்வரலாற்று கதை. சாரமான, தைரியமான படைப்பு.

மருபூமி‘- பஷீரை வாசித்து மீண்டு படிக்கவேண்டிய படைப்பு என்று படுகிறது. அப்பொழுது இதை நான் இன்னும் நெருக்கமாக உணரலாம். ஆனால், ஒரு படைப்பாளியின் முதல் கதை தொகுப்பிலேயேமரணத்தை நேரில் காணும் அனுபவத்தை, வாழ்க்கையை தவிர்த்து மரணத்தை விரும்பும் கண்ணோட்டத்தை, வாழ்வை அரவணைத்த அந்த கடைசி நொடிகளை பற்றி வாழ்க்கை முழுக்க வருந்துவதை தொட்டு செல்வது சாகசமான முயற்சி. அஜிதனின் இந்த இலக்கிய சாகசங்கள் தொடரட்டும்.

புது மணமகனுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்.(எங்கள் ஊரிலெல்லாம், கல்யாண ஆன ஒரு வருடம் வரைக்கும் மாப்பிள்ளையை புது மணமகனாக பார்ப்பார்கள்!)

அன்புடன்,

ராஜு,

ஹைதராபாத்.

முந்தைய கட்டுரைகல்வி, ஆசிரியர்- விவாதம்
அடுத்த கட்டுரைகன்னிக்கோவில் இராஜா