அழிவில் எழும் ஆக்கம்- கடிதங்கள்

அல் கிஸா வாங்க

அல்கிஸா மின்னூல் வாங்க

 இளைய ஜெயமோகனுக்கு வாழ்த்துகள். திருமண வாழ்வு இனிதாக மணக்கும் என்றெண்ணுகிறேன்.

சற்று முன்னர்தான் அல் கிஸா வாசித்து முடித்தேன்உண்மையில் இதுபோன்ற நாவலை  முடித்தபின்னர் சிலநேரம் மன பாரம் குறைந்தது போலிருக்கும். சிலநேரம் அந்த உலகிலிருந்து மீண்டுவிட்டோமே எனும் மன அழுத்தமும் இருக்கும்.

பந்தயக்குதிரை போல மெல்லிய ஓட்டத்துடன் கிளம்பும் நாவல் போகப் போக விரைவு கொள்கிறது. முடிவில் வெற்றிக் கம்பத்தை எட்டிப் பிடிக்கிறது.

கண்களாலேயே பேசிக் கொள்ளும் காதலும்அதன் விளைவால் தலைவனும் தலைவியும் பிரிவால் வாடுவதும் சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம். இங்கோ அக்காதல் சொல்லவே இயலா ஓர் ஆத்திரத்தையும்அழுகையயும்கொண்டு வருகிறது

சுஹராஹும், ஹைதரும் கண்களால் பார்க்காமல் பார்த்துக் கொள்வதும், மௌனமே வார்த்தைகளாவதும் கவிதையாய் வடிக்கப்பட்டுள்ளன.

சின்ன ஆமீனா அருமையான பாத்திரம் .அவள் மெல்லிய சரடாய் இணைக்கிறாள் இருவரையும். அவள் காணாமல் போக, நம் மனம் பதை பதைக்கக் கடைசியில் அவள் முகவரியைத் தந்து விட்டு வரும்போது நமக்கும் உணர்ச்சி மேலீட்டில் கண்ணீர் வருகிறது.

போர்க்களக்காட்சிகள் பின்னோக்கு உத்தியில் காட்டப்பட்டிருப்பதால் நம் கண் முன்னேயே நடப்பது போலிருக்கின்றனசிக்கலில்லாத அளவோடு கூடிய அழகான சுருக்கமான உரையாடல்கள் நாவலின் பலம்.

நாவலைப் படிக்கும்போதே நான் அஜ்மீர் சென்ற நினைவுகள் மேலெழுந்து விழுந்து கொண்டிருந்தன 

இந்நாவலை எழுதி முடிப்பது என்பது கம்பிமேல் நடக்கும் சாகசம்தான். அஜிதன் வெற்றி பெற்றுள்ளார்.வாழ்த்தி மகிழ்கிறேன்.

வளவ. துரையன், 

கடலூர்

அன்புள்ள ஜெ

அண்மையில் அல்கிஸா வாசித்து முடித்தேன்.

அதன் ரத்தினச்சுருக்கமே அதன் அழகு என நினைக்கிறேன். மிகப்பெரிய ஒரு வரலாற்றுப்பின்னணி ஒரு காதல்கதைக்குள் வைக்கப்பட்டுள்ளது. வெறுப்பும் அழிவும் கொந்தளிக்கும் ஒரு வரலாறு. அது சேறுபோல தோன்றுகிறது. அதில் ஓர் அழகிய பூ மலர்ந்துள்ளது. அதுதான் அந்தக் காதல். அதன் விளைகனியாகிய குழந்தை.

எனக்கு இந்நாவல் ஈழப்போராட்டத்தையே நினைவூட்டியது. எந்த அழிவிலும் பூக்கள் மலர்கின்றன. விதைகள் உருவாகி முளைக்கின்றன. அதுதான் மனிதன்  அழிவை எதிர்கொள்ளும் இயல்பான வழி என நினைக்கிறேன்

சுதாகர் மாரிமுத்து

முந்தைய கட்டுரைதொடங்கும் தீ
அடுத்த கட்டுரைசேனாதிராய முதலியார்