கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

கிருஷ்ணம்மாள் தமிழக காந்திய இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் காந்தியின் ஆணைப்படி கிராம புத்துருவாக்கப் பணிகளில் பங்களிப்பாற்றினார். நிலக்கொடை இயக்கம் வழியாகவும் தானே முன்னெடுத்த உழுபவருக்கே நிலம் என்னும் இயக்கம் வழியாகவும் ஏராளமான மக்களுக்கு நிலம் கிடைக்க வழிவகுத்தார். காந்திய வழியில் சமூக அமைதிக்காபவும் பணியாற்றினார்.

இரண்டாம் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாக்குப்பிடிக்கும் பொருளியல் ஆகியவற்றுக்காக காந்திய வழியில் போராடினார். மக்களை ஒருங்கிணைத்து வன்முறையற்ற நீடித்த போராட்டங்களை நிகழ்த்துவதும், அதற்கு முடிந்தவரை சட்டத்தை துணைகொள்வதும் அவர் வழிகள். பெரும்பாலான போராட்டங்களில் நீண்டகால அளவில் வெற்றியை அடைந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைகொற்றவை, தமிழ்நேயம்- ஒரு பதிவு
அடுத்த கட்டுரைஇலக்கியம் மனிதனை மாற்றுமா?