கதைத்தொடக்கம்

 

 

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

(வாசிப்பை நேசிப்போம் 

இந்தக் குழு வாசிப்பில் நாம் அனைவரும் கலந்து கொண்டு வாசிக்க நாம் தேர்ந்தெடுத்த மிகப்பெரிய செயல்தான் என்று சொல்ல வேண்டும் இது ஆரம்பித்து விட்டோம் எப்படியும் கண்டிப்பாக முடித்து விடுவோம் என்ற எண்ணம்அனைவருக்கும் உண்டு இந்த வெண்முரசின் முதல் பாகம் முதற்கனல்..

நாம் கண்ட மகாபாரதம் எல்லாம் பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலி கர்ணன் துரியோதனன் கிருஷ்ணன் சகுனி என்று இவர்களை சுற்றியே நாம் கண்ட பாரதங்கள் இருந்து.

சகுனியின் பகடைக்காயின் ஆட்டத்தினால் பாஞ்சாலி துயலுரிக்கபட்டு பாஞ்சாலி சபையில் பட்ட துன்பத்திற்கு பதிலுக்கு பதிலாக போர் என்றும் வில்லில் சிறந்தவன் அர்ஜுனன் பலத்தில் சிறந்தவன் பீமன் என்று சிறுவயது கதையும் பலமுறை பல இடங்களில் கேட்டதும் ஆகத்தான் இருந்திருக்கும் ஆனால் இந்த தொடக்கக வெண்முரசின் முதற்கனல் மகாபாரதம் நாகத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று இன்று ஆரம்பத்தில் தொடக்கப் புள்ளியில் தொடங்கி முடிவு அவரிடமே வந்து நிற்கிறது..

இந்த முதல் நாவலில் ஆசிரியர் இங்கு 10 தலைப்பில் 50 அத்தியாயங்களில் சொல்கிறாா்.. அது வருமாறு

  • வேள்விமுகம்
  • பொற்கதவம்
  • எரியிதழ்
  • அணையாச்சிதை
  • மணிச்சங்கம்
  • தீச்சாரல்
  • தழல்நீலம்
  • வேங்கையின் தனிமை
  • ஆடியின் ஆழம்
  • வாழிருள்

நான் இதுவரை கேட்டு வாசித்த மகாபாரத்தில் மானசாதேவி என்று ஒரு கதை அறிந்ததே இல்லை இதில் தான் அறிகிறேன் நாகர்குல தலைவியாக அறிந்து கொண்டேன் அவர் தனது மகனை அனுப்ப ஏற்படுத்தும் முயற்சிகள் என்ன செய்தார் ஆஸ்திகன் என்று பார்க்கத் தூண்டுகிறது..

இந்தக் கதையில் நாம் பார்க்கும் ஒன்று என்னவென்றால் நல்லவர்கள் கெட்டவர்கள் பகைவர் எதிரி என்று எவருமே எவரையும் சுட்டிக்காட்ட முடியாத நிலையில் இருந்தது ஒரு ஒருவருக்கு ஒவ்வொரு காரணங்கள் இதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தான் எல்லோரும் இடத்திலும் ஏதோ

ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறதுஅதை அனைவரும் உணர வேண்டும் என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக கையாண்டு எழுதியுள்ளார்..

இந்த முதல் பாகத்திலே இத்தனை பெயர்கள் இத்தனை இலக்கிய சொற்கள் என்று வியந்துதான் போக வைக்கிறது இதை அவர் எழுத எத்தனை சிறத்தை எடுத்து இருப்பார் என்று முதல் பாக சில அத்தியாயங்கள் வாசிக்கும் போதே நாம் அனைவரும் அறிந்திருப்போம்..

இந்த சுத்த இலக்கிய நாவலில் பல இலக்கண உவமைகளுடன் எழுதி இருப்பதுதான் இந்த நாவலின் தனித்தன்மை என்று எனக்குத் தோன்றுகிறது நாம் பல நாவல்கள் பல கவிதை நூல்கள் ஆய்வு நூல்கள் என்று வாசித்திருப்போம் ஆனால் அத்தனையும் மொத்தமாக ஒரே நூலில் வாசிப்பது நான் இதுதான் முதல் முறை இதற்கு முன் நான் வாசித்ததில்லை இந்தநூல்களில் அப்படி அங்கெங்கு என்று தெளித்து விடுகிறார் ஆசிரியர் ஒரு நாள் ஒரு அத்தியாயம் என்று நாம் வாசித்து வருவதும் ஒரு சில நேரங்களில் கதையின் முன் சில செயல்கள் மறந்து போய் விடுகிறது எனக்கு மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது நான் இதுவரை புத்தகமாக மட்டுமே வாசித்துள்ளேன் முதல் முறையாக மொபைலில் வாசித்த புத்தகம் என்று கூட சொல்லலாம் இந்த பெரிய திட்டத்தை செயல்படுத்த அனைவரையும் ஊக்கப்படுத்தி ஒழுங்குப்படுத்தி கொண்டு செல்லும் அட்மின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்வோம் அவரின் முயற்சி இல்லை என்றால் இதுசாத்தியமா என்பது அனைவரின் கேள்வி குறிதான்..

இந்த முதற்கனலின் கதையில் தொடங்கும் போது ஒரு கதைக்குள் இன்னொரு கதை அந்த கதைக்குள் இன்னொன்று என்று உள்ளே உள்ளே போய்க் கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கு வந்து விடுவதும் மிக சிறப்பு..

நாகர்குல தலைவியான மானச தேவியிடம் தொடங்குகிறது கதை அவரின் மூலம் தொடங்கி கதை முழுவதும் நாகங்கள் சூழ்ந்து சுற்றி நிற்கின்றன..

விசித்திர வீரியன் என்னும் மன்னன் பற்றி முன்பு ஒரு சில இடங்களில் படித்திருந்தாலும் இதில் வாசிக்கும் போது எனக்கு ஒரு புது மாதிரியாக தெரிந்தது.. பீஷ்மர் என்று நாம் முன்பு அறிந்திருந்தாலும் இதில் மனிதன் தனியாக யாருமில்ல மனதுடன் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று நினைப்புடன் என்றும் இந்த உலகில் மாவீரன் என்று நம்மால் உணர முடிகிறது.. இவருக்கு இணையானவன் இந்த உலகில் இவர் மட்டுமே என்று எண்ணத் தோன்றுகிறது தன் செய்த வாக்கிற்காக தான் வாழ்க்கையின் பாதையை மாற்றிக் கொள்ளும் மகான் வாக்கு என்பது ஒரு அறம் அதை எதற்காகவும் துறக்க மாட்டேன் என்று துறவும் வாழ்க்கை வாழ்கிறார்..

பீஷ்மர் அவர்கள் அந்த பெண்களை தூக்கி வருவது அறமா என்று பல கேள்விக்கணைகளுடன் உள்ளுக்குள் இருந்தாலும் அவருடைய உள்ளத்தின் துன்பத்தை போக்கி சிபி சக்கரவத்தின் கதையை சொல்கிறார் வியாசர் எத்தனை

முறை எந்தெந்த கோணங்களில் யோசித்தாலும் பீஷ்மருக்கு அந்த பெண்களின் சாபம் அழுகைக்கும் விடை காண முடியாது என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதை மட்டும் அவர் உணர்ந்தே இருந்தார் ..

பீஷ்மர் மீது காதல் கொண்ட அம்பை அவள் அவரிடம் அது நியாயம் கேட்பது தன் காதலை ஏற்றுக்கொள்ள

கேட்டதும் நீங்களும் என்னை காதலிப்பது உண்மை ஏன் மறுக்கிறீர்கள் என்று வாதிடும் போது நமக்கு வேறொரு பீஷ்மர்

அந்த ஒரு கணத்தில் நம் மனதில் வந்து விட்டு சென்று விடுகிறார்..

ஜனமே ஜெயன் நாகங்களை அழிக்க நடத்தும் யாகத்திற்கு வந்து அதை தடுத்து நிறுத்த வரும் நாகபுத்திரன் ஆஸ்திகன் புறப்படுகிறான் அதுவே ஆரம்பம். யாகத்தை எப்படியும் தடுத்து நிறுத்தி விடலாம் என்று போட்டியில் வெற்றி பெறுகிறான் சிறுவன் அவன் செய்தது தவறா இல்லை சரியா என்று சொல்வதற்கு வியாசர் வந்து நீதி சொல்லவேண்டும் என்று வேண்டுகிறார் ஆஸ்தீகன்..

வியாசரும் வருகிறார் அவர் வரும் இடமும் சிறப்பாக இருக்கும். இப்படி ஆரம்பித்த கதைகள் கிளை கிளை கதைகளாக இந்த முதற்கனலில் ஏகப்பட்ட கதைகள் உருவாகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது..

சால்வ மன்னனை தேடி சென்ற அம்பை அங்கு அவளுக்கு கிடைக்கும் அவமதிப்பு அவளை அந்தப்புரத்தில் வாழ விரும்பினால் என்னுடன் இருக்கலாம் என்று சொல்லும் அது ஒருபோதும் ஏற்காத அம்பை தனது பயணத்தை தொடங்கும் போது பீஷ்மர் பற்றி தன் மனதில் தோன்றிய காதல் அவரிடம் செல்வது என்று வேறு வேறு கோணமாக வரும் இதுதான் கதை என்று யூகிக்க முடியாத இடங்களில் நகர்கிறது கதை..

இது எல்லாம் கற்பனைக்கு எட்டாத இலக்கு இதனின் வார்த்தை ஜாலங்கள் யாரும் அறியாத நடை என்று தான் மனதில் இதை வாசிக்கும் போது அனைவருக்கும் தோன்றும்..

இந்த முதற்கனலிலே இத்தனை கதைகள் என்றால் இன்னும் 25 பாகங்கள் இருக்கிறது இது எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு என்றுதான் தோன்றுகிறது இந்த நூலைப் பற்றி மனதில் பல நிகழ்வுகள் இருந்தாலும் எழுதுவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது எதை எழுதுவது எதை தவிர்ப்பது எது எது எல்லாம் சொல்லலாம் என்று மனதிற்குள்ளே பல நினைவுகள் வருகிறது..

இந்த முதற்கனலில் மட்டுமே நாம் இத்தனை விஷயங்களை புதிதாக தெரிந்து கொண்டோமோ அல்லது மிகப்பெரிய புனைவைப்பற்றி அறிந்து கொண்டோமா என்பது ஒருபுறம் இருந்தாலும் இது மிகப் பிரமாண்டமான மிக மிக பிரம்மாண்டம் என்று தான் சொல்ல வேண்டும் அதை யாரும் மறுக்க இயலாது..

மகாபாரதத்தில் ஒரு ஒரு கதாபாத்திரமாக நாம் கடந்து போய் இருப்போம் அதை முழுதும் அறிந்து கொள்ள இந்த வெண்முரசு முக்கியம் மிக முக்கியம் இன்னும் பலரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள போகிறோம் என்று எண்ணும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது இந்தத் திட்டத்தில் நாம் ஒரு சில வருடங்கள் இந்த மகாபாரதம் மனிதர்களுடன் வாழ போகிறோம் என்பது மட்டும் உண்மை எந்த புத்தகம் வாசித்தாலும் இதனின் சிறு ஞாபகம் கூட வந்து விடுகிறது அதன் பிறகு மனம் சில நேரம் கடந்து தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடிகிறது முதற்கனலை நம்மளை முழுதும் ஆட்கொண்டு விட்டது அடுத்து வருவது நம்முடன் என்னவெல்லாம் செய்ய காத்துக் கொண்டுள்ளதோ…

நடராஜன் செல்லம்

வாசிப்பை நேசிப்போம்  

முந்தைய கட்டுரைபாமரரின் வெறுப்பை எதிர்கொள்ளுதல்
அடுத்த கட்டுரைகுருகு இதழ்