ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுக வகுப்புகள் ஏப்ரல் ஏப்ரல் 19 20 மற்றும் 21 தேதிகளில் ஈரோட்டை அடுத்த மலைத்தங்குமிடத்தில் நிகழும்.
இந்த வகுப்புகள் ஓவியங்கள் வரைபவர்களுக்கு மட்டுமானவை அல்ல. ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை மற்றும் ஆலயக்கலைகளை ரசிப்பதற்கான பயிற்சிகளும்கூட.
இன்றைய வாழ்க்கையில் காட்சிக்கலைகளுடன் ஓர் அறிமுகமென்பது நாகரீகத்தின் அடிப்படைகளில் ஒன்று. நவீன ஓவியம் அல்லது புகைப்படக்கலை பற்றிய பரிதாபகரமான அறியாமையை வெளிப்படுத்தி கேலிக்குரியவர்களாக ஆகும் ஏராளமானவர்களை சந்திக்கிறேன். பலரை உயர்மட்டங்களிலேயே காணமுடிகிறது. ஒருவர் தன்னை இன்றைய நவீன நாகரீகத்தில் அறிமுகமுள்ளவர் என்று காட்டிக்கொள்ளக்கூட கொஞ்சம் காட்சிக்கலை அறிமுகம் தேவையாகிறது.
இன்றையவாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றான நவீன ஓவியம்- புகைப்படம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், வகைபேதங்கள், அவற்றை அடையாளம் கண்டு ரசிக்கும் முறை பற்றிய பயிற்சி இது.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்
ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம் [email protected]
ஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்
நவீன ஓவியக்கலையை ரசிக்கும் பயிற்சி.
————————————————————————————————–
முந்தைய நிகழ்வுகள் (இடமிருப்பவை)
வைணவ இலக்கியம்- அறிமுகம்- ராஜகோபாலன்
இந்த வகுப்பில் நவீன அழகியல் கொள்கைகளில் தேர்ச்சிகொண்ட இலக்கியத் திறனாய்வாளர் ஜா.ராஜகோபாலன் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் வரலாற்றுப்பின்னணி, தத்துவபின்னணி ஆகியவற்றை விளக்கி இன்றைய நவீன உள்ளம் கொண்ட ஒருவர் அதை அணுகுவதற்கான ஓர் அணுகுமுறையை அளிப்பார். பாடல்கள் மீதான அணுக்கவாசிப்பை இன்றைய பார்வையில் முன்வைப்பார். கூடவே பிரபந்தத்தை மரபான முறையில் ஆழ்ந்து கற்ற ஒருவர் பிரபந்தத்தை அதற்குரிய ஓதுமுறைமையுடன் கூறுவார்
வைணவர்களுக்கு மட்டுமான அரங்கு அல்ல இது. மரபான முறையில் பக்திகொண்டவர்களும், இலக்கியவாசகர்களும் கலந்துகொள்ளலாம். மார்ச் 22 23 மற்றும் 24
நவீன மருத்துவ அறிமுக முகாம்
நவீன மேலை மருத்துவம் சார்ந்த ஓர் அறிமுக வகுப்பு. அறுவைசிகிழ்ச்சை நிபுணரும், மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான டாக்டர் மாரிராஜ் நடத்துகிறார்.
ஒரு சாமானியனுக்கு உடற்கூறியல், நோய்கள், மருத்துவத்தின் அடிப்படை முறைகள் பற்றிய அறிமுகம் அளிக்கும் வகுப்பு இது. பொதுவெளியில் பணியாற்றும் எவரும் அறிந்திருக்கவேண்டியது. ஒருவரின் வாழ்க்கைநோக்கையே மாற்றியமைக்கும் பயிற்சி.
ஏப்ரல் 5,6 மற்றும் 7
நவீன மருத்துவம், அறிமுக முகாம்.
நவீன மருத்துவ அறிமுகம், கடிதம்
இந்திய தத்துவம் இரண்டாம் வகுப்பு
ஏப்ரல் 12 13 மற்றும் 14
========================================================
பங்கேற்பாளர்கள் முன்னரே திட்டமிடுவதற்கு உதவியாக வரவிருக்கும் நிகழ்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அறிவிப்பு தொடர்ந்து வெளிவரும்.
வரவிருக்கும் நிகழ்வுகள்
இந்திய தத்துவம் மூன்றாம் வகுப்பு
இந்திய தத்துவத்தின் மூன்றாம்நிலை வகுப்புகளின் இரண்டாவது அணி ஏப்ரல் 26, 27, 28 ஆம் தேதிகளில் நிகழும்
ஏப்ரல் இறுதியில் விடுமுறை தொடங்குவதனா தொடர்ச்சியாக ஏப்ரல் 30 மற்றும் மே 1 நாட்களில் (இரண்டு நாட்கள்) மாணவர்களுக்கான ஒரு தனிப் பயிற்சியை நிகழ்த்தும் திட்டம் உண்டு.
கட்டுரை நூல்களை கூர்ந்து வாசிப்பதற்கும் தொகுத்துக் கொள்வதற்குமான பயிற்சி இது. இலக்கியவாசகர்கள், சிந்தனைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கான பயிற்சி . கல்லூரி மாணவர்கள், போட்டித்தேர்வு எழுதுபவர்கள் ஆகியோருக்கும் உதவிகரமானது
இவ்வகுப்பை நான் இருமுறை முன்னர் மாணவர்களுக்காக எடுத்துள்ளேன். இந்தியாவிலும் வெளியிலும். இது கோட்பாடு- செய்முறை அடங்கியது
சைவத் திருமுறைகளின் மீதான வாசிப்புப் பயிற்சி வரும் மேமாதம் முதல்வாரம் 3,4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நிகழும்
மே மாதம் 7,8 தேதிகளில் ( செவ்வாய் புதன் இரண்டு நாட்கள்) இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உதவும் கவனக்குவிப்பு- ஊழ்கப்பயிற்சி. தில்லை செந்தில் பிரபு.
மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. அவர்களின் பயிற்சிநிலை, அதன் தொடர்ச்சி ஆகியவற்றை ஆசிரியர் பரிசீலிப்பார்
மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஆண்டுதோறும் நிகழும் குருநித்யா இலக்கிய விழா.