என் சிந்தனைகளை என்னுடன் இணைந்து சிந்திக்கும் நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்துகொண்டு, விரிவாக்கிக் கொள்ளும் பொருட்டு கட்டண உரைகளை நடத்துகிறேன். கட்டணம் என்பது அக்கறையும் பொறுமையும் கொண்டவர்களை மட்டுமே பங்கெடுக்கச் செய்து, மற்றவர்களை தவிர்க்கும் பொருட்டுத்தான். கட்டண உரைத்தொடர்களில் அடுத்த உரை பெங்களூரில் நிகழ்கிறது.
என் சிந்தனைமுறை இலக்கியத்தில் இருந்து மெய்யியல் நோக்கிச் செல்வது. இதுவும் அத்தகைய உரையே. மரபு, தனிமனிதன் ஆகியவற்றை வரையறுத்து விரிவாக்கிக் கொள்ளும் நோக்கம் கொண்டது இந்த உரைத்தொடர். அதில் அடுத்த உரை ‘இரு பெருநிலைகள்’ மானுட இருப்பின் இரண்டு உச்சநிலைகள் பற்றி, அவற்றை நோக்கிய பயணம் பற்றி ஓர் ஆய்வு.
ஆர்வமுள்ள வாசகர்கள், நண்பர்கள் பங்கெடுக்கலாம்.
பதிவுசெய்ய இணைப்பு