ஆலயக்கலைப் பயிற்சி முகாம்

ஜெயக்குமார் நிகழ்த்திவரும் ஆலயக்கலைப் பயிற்சி முகாம்கள் இதற்குள் பலநூறுபேரைச் சென்றடைந்துவிட்டன. அவை அவர்களின் வாழ்க்கைப் பார்வையிலேயே பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டன என்ற எதிர்வினைகள் வந்தபடியே உள்ளன. ஒரு சிறிய கற்கோயில்கூட தெரிந்த ஒருவரைப் பார்க்கும் இனிய அதிர்வை உருவாக்குகிறது. உடனே சென்று பார்த்து அதை புரிந்துகொள்ள தூண்டுகிறது. ஒவ்வொருநாளும் கோயில்களுக்கு செல்கிறேன். முழு வாழ்க்கையையே ஆலயக் கலையும் அதன் வழியாக வந்துசேரும் மரபின் ஞானமும் மாற்றியமைத்துள்ளன என்று ஒரு நண்பர் உணர்ச்சிகரமாகச் சொன்னார்

அடுத்த ஆலயக்கலை முகாம் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் மார்ச் மாதம் 29 30 மற்றும் 31 தேதிகளில் நிகழ்கிறது. பங்கெடுக்க விழைபவர்கள் எழுதலாம்

[email protected]


முந்தைய நிகழ்வுகள், இடமிருப்பவை

வைணவ தத்துவ அறிமுக முகாம் மார்ச் மாதம் 22 23 மற்று 24 (வெள்ளி சனி ஞாயிறு)

வரவிருக்கும் நிகழ்வுகள்

நவீன மருத்துவ அறிமுக முகாம் ஏப்ரல் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில்.

மருத்துவப் பேராசிரியர் மாரிராஜ் இந்திரன் நடத்தும் முகாம். நவீன மருத்துவம் சார்ந்து நம் உடலை, வாழ்க்கையை அறிந்துகொள்ளவும் மதிப்பிடவும் உதவும் வகுப்பு

முந்தைய கட்டுரைபாப்பா, சாப்பிடு பாப்பா!
அடுத்த கட்டுரைபோருக்கு முன்…