பழைய புழுதி

1981 வாக்கில் இந்த ’கௌபாய்’ படத்தை திருவனந்தபுரம் ஸ்ரீகுமார் அரங்கில் பார்த்தேன். மார்லன் பிராண்டோ நடித்தபடம். நான் பிறப்பதற்கு ஓர் ஆண்டு முன் வெளியானது. இருபதாண்டு கழித்து இந்தியாவுக்கு ‘சுடச்சுட’ வந்து சேர்ந்தது.

மொத்தமாக படமே மறந்துவிட்டது. ஆனால் அதில் ஒரு புழுதிமலையில் குதிரைகளில் துரத்தப்பட்டு தப்பிச்செல்லும் காட்சி, வண்ணாத்துப்பூச்சி சிறகுகள் போல குதிரைகளின் காலடியில் புழுதி ஒளியுடன் விரியும் அழகு, என் நினைவில் இருந்தது. அண்மையில் யூடியூபில் படத்தை கண்டடைந்தேன். அழகாக மீட்கப்பட்ட வடிவம். வசனஎழுத்துக்களுடன்.

அனேகமாக 2024ல் நான் மட்டுமே அதை பார்த்திருப்பேன் என நினைக்கிறேன்.

 

முந்தைய கட்டுரைதக்காணத்தின் காதலன்
அடுத்த கட்டுரைசுபமங்களா