இன்று அஜிதன் – தன்யா திருமணம். கோவையில் இன்று மதியம் திருமண நிச்சயம். மாலை வரவேற்பு. நாளை காலை திருமணம்.
மணமகளின் ஊர் கோவை. மணமகளின் தந்தை ரமேஷ் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மாவடட அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மணமகள் தான்யா காஸ்ட் அக்கவுண்டன்ஸி தே ர்வில் வென்றபின் அசெஞ்ச்சர் என்னும் நிறுவனத்தில் பணியாற்றுபவர். திருமணம் மணமகள் குடும்பத்தால் அவர்களின் மரபுப்படி நடத்தப்படுகிறது.
நண்பர்கள் வந்து குழுமுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விருது விழாக்களில் நிகழ்வது. அவை ஒவ்வொன்றும் ஒரு திருமணம் போலத்தான். கொண்டாட்டமான உளநிலை. கூட்டாக விருந்து. இப்போதும் அதே மனநிலைதான் உள்ளது. தொடர்ச்சியாக பதினைந்தாண்டுகளாக நான் நண்பர்களுக்கு விருந்துபச்சாரம் செய்துகொண்டே இருக்கிறேன் என்பதுபோல. ஒரு மாபெரும் குடும்பம் என்பதுபோல. இதோ இன்னும் சில மாதங்களில் ஈரோட்டில் தூரன் விருதுவிழா வரப்போகிறது. அதற்கு முன் குரு நித்யா காவிய அரங்கு நிகழவிருக்கிறது. நாம் சந்தித்துத் தீரவில்லை.
நண்பர்கள்,வாசகர்கள் அனைவரையும் கோவைக்கு வரவேற்கிறேன்.