ராமையா பிள்ளையின் நாதஸ்வர இசை மிக சன்னமாக இருக்கும். பலகாலம், இவரும் கும்பகோணம் ராஜண்ணா பிள்ளையும் சேர்ந்து வாசித்திருக்கிறார்கள். முகவீணை வாசிப்பதிலும் திறன் பெற்ற ராமையா பிள்ளை, 1950ஆம் ஆண்டு நடைபெற்ற இசைமாநாட்டில் அக்கருவி பற்றிய விளக்க நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். எப்போதும் இசை நூல்களை வாசிப்பதிலும், புதிய ராகங்களைக் கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்
தமிழ் விக்கி கும்பகோணம் ராமையா பிள்ளை.