பால விநோதக் கதைகள்

தமிழின் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடிப்படைப்பு.  எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகளில், சிறுவர்களே உணர்ந்து கொள்ளும் விதத்தில் அறிவுறுத்தல்கள் அமைந்துள்ளன. கதைகளின் முடிவுகளும் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில், சிறார்கள் ஏற்கும் விதத்தில் உள்ளன. எதிர்மறையான முடிவுகள் சிறுவர் மனதில் முரணான எண்ணங்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதால் அவ்வாறு அமைத்துள்ளார் அ. மாதவையா. கற்பனைகளுக்கு அதிக இடமளித்திருப்பதுடன், சில கதைகளின் இடையே, குழந்தைகள் பாடும் வகையில் பாடல்களையும் இடம் பெறச் செய்துள்ளார்.

பால விநோதக் கதைகள்

பால விநோதக் கதைகள்
பால விநோதக் கதைகள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசிறுமைகளும் அவமதிப்புகளும், உரையாடல்
அடுத்த கட்டுரைஒரு பொருளியல் விபத்து