யோகப்பயிற்சி முகாம்

குரு சௌந்தர் இலக்கிய வாசகராக எனக்கு அறிமுகமானவர். சென்ற பதினைந்தாண்டுகளாக என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உடனிருக்கும் நண்பர். பிகார் யோகமரபு என அழைக்கப்படும் சத்யானந்த யோக மரபில் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்ட ஆசிரியர். சென்னையில் சத்யானந்த யோக மையம் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். தொழில்முறையாக முதலீட்டு ஆலோசகர்.

சௌந்தர் சென்ற ஈராண்டாக நம் ஒருங்கிணைப்பில் யோகப்பயிற்சிகள் அளிக்கிறார். பலநூறு பேர் அவற்றால் பயனடைந்துள்ளனர். இன்று மெல்ல உலகளாவ அவருடைய புகழ் பரவத் தொடங்கியுள்ளது. இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என அயல்நாடுகளிலும் பயணம் செய்து புகழ்பெற்ற யோக வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார். விரைவில் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கும் செல்லவிருக்கிறார்.

சௌந்தர் நடத்தும் யோக வகுப்புகள் வரும் மார்ச் மாதம் 15 ,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழும். அனைவரும் பங்கெடுக்கலாம். ஏற்கனவே பங்கெடுத்தவர்கள் தங்கள் பயிற்சிகளை செறிவாக்கவோ, நின்றுவிட்டிருந்தால் தொடரவோ பங்குகொள்ளலாம்.

தொடர்புக்கு

[email protected]


 

 

முந்தைய நிகழ்ச்சிகளின் அறிவிப்புகள்

சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு -நாள்  பிப்ரவரி 23,24 மற்றும் 25 


வரவிருக்கும் நிகழ்வு

திவ்விய பிரபந்த வகுப்புகள் மார்ச் மாதம் 22 ,23 மற்றும் 24  

முந்தைய கட்டுரைஜெய்ப்பூர் இலக்கிய விழா 2024
அடுத்த கட்டுரைகுரல் கதைகள் – கடிதம்