அருண்மொழியின் நெல்லை உரை. போகும்போதே யாரோ அங்கே திறந்த அரங்கில், வந்துகொண்டும் சென்றுகொண்டும் இருக்கும் கூட்டத்திடம் பேசவேண்டும் என சொல்லிவிட்டார்கள். பதற்றப்பட்டுக்கொண்டே சென்றாள். முன்வரிசையில் நாலைந்து வயசாளிகள் அவர்களுக்குள் பேசி சலம்பியபடியே இருந்ததாக புகார் சொன்னாள். ஓரிரு கவனச்சிதறல்களை தவிர்த்தால் சொல்ல வந்ததை ஓரளவு சொல்லிவிட்டாள் என்றுதான் நினைக்கிறேன்