கோவர்தனனின் கடைசி முகநூல் பதிவு

புலி உலவும் தடம் வாங்க

மறைந்த கோவர்த்தனன் மணியன் அவர்களின் சமீபத்திய முகநூல் பதிவு

ஒரு படைப்பை வாசித்த பின் அந்த படைப்பாளியிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் பெரும்பாலும் நான் உடனடியாக அதைச் செயல்படுத்தியதில்லை. வாய்க்கும் பொழுது பேசிக்கொள்வோம் என இருந்து விடுவேன். ஆனால்புலி உலவும் தடம்சிறுகதைத் தொகுப்பு வாசித்தவுடன் எழுத்தாளர் மு.குலசேகரன் அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசினேன். அதற்கு ஏதுவாக அவரது முகநூல் பக்கத்தில் தொலைபேசி எண் பதிவிட்டிருந்தார்.

தமிழின் முழுமையான பின்நவீனத்துவ சிறுகதைகள் இவருடையவை. கலவையான உணர்வுகளை உருவாக்கக்கூடிய எழுத்து. ஆழ்ந்த அமைதியும் கடும் அழுத்தமும் மிக்கவை. தொகுப்பு முழுவதும் அருமையான சிறுகதைகள்.தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அபாரமான எழுத்துகள் அவருடையவை.

குலசேகரன்

தலைகீழ் பாதைபாலம் ஒன்று கட்டப்பட்டு வருவதால் பாதிப்புக்குள்ளாகும் நகலகம் ( ஜெராக்ஸ் கடை ) நடத்தி வரும் ஒருவரின் எண்ணமும், சிந்தனையும் தான் கதை. கடைக்கு நகலெடுக்க வரும் ஒப்பந்ததாரர் ஒருவரின் தாள் ஒன்றை மறைத்து வைப்பதின் மூலம் பாலத்தை திறக்க விடாமல் செய்து விடலாம் எனும் அவரது கற்பனையோடு முடிகிறது கதை. அந்த கடைக்காரரின் உணர்ச்சிகளை அப்படியே ஒரு வாசகனுக்கு  கடத்தி விடும் கதை.

மறைந்து தோன்றும் கதவுகதை பெரும் திகைப்பை அளிக்கக்கூடியது.ராணி உண்மையாவே காணாமல் போனாளா ? கூத்துப் பார்க்க வந்த டியூசன் வாத்தியாரை கண்ட அந்த இரவு ராணி எங்கு போனாள்? என்ன நடந்தது? எப்படி திரும்பவும் வீட்டிற்குள் வந்தாள் என்பதெல்லாம் வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருக்கிற சிறந்த கதை.

ஆதியில் காட்டாறு ஓடியதுசென்னை வெள்ளக் காட்சிகளை நினைவுபடுத்திய கதை. கொஞ்சம் முயன்றால் சூழ்ந்து ஓடும் சாக்கடையின் வாசத்தைக் கூட நுகர்ந்து விடலாம் .

பிடித்த பாத்திரத்தின் பெயர்ஒரு வாசகர் தன்னைக் கவர்ந்த எழுத்தாளர் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறார். சந்தித்தாரா , சந்திக்கவில்லையா?, போனாரா, போகவேயில்லையா? போன்ற கேள்விகளை உருவாக்கும் சிறப்பான கதை.

கோவர்த்தனன்

புலி உலவும் தடம்உண்மையில் புலி வந்ததா? காதர் பாட்சா பார்த்தானா? சிவபாலன் நம்புவது உண்மைதானா? புலி வருமா ? பல கேள்விகளை உருவாக்கும் படைப்பு . “முடிவற்ற தேடல்வாடிக்கையாளர் ஒருவரின் பணத்தை பெற்றுக் கொண்டு கணிப்பொறி வாங்கச் சென்னைக்குச் செல்லும் ஒருவர் பணத்தை தொலைத்துவிட்டதாக நம்புகிறார். ஊருக்கு திரும்பி வர, அப்படி தான் கணிப்பொறி வாங்க பணமே கொடுக்கவில்லை என்கிறார் வாடிக்கையாளர். ஆனாலும் பணத்தைத் தொலைத்து விட்டதாக நம்பி குழம்பிய நிலையில் பணத்தைத் தேடும் ஒருவனின் கதை.

கடைசி விதைப்பாடு”  அழுத்தமான கதை. நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட இருக்கும் தனது கொல்லையில் அதிகாரிகளால் அளவெடுத்து கல் நடப்பட்டவுடன் அதே போன்று பாதிப்புக்குள்ளானவர்களின் கொல்லையைச் சுற்றிப் பார்க்கும் ஒருவர் அவர்களின் செயல்பாடுகளை விவரித்து விட்டுவிதைக்கு வைத்திருந்த நிலக்கடலையை மனைவியோடு சென்று தன் நிலத்தில் கடைசியாக விதைக்கிறார்.”வெளியில் பூட்டிய வீடுகனவில் கண்ட பாம்பை நிஜத்தில் தேடும் பெண்ணின் கதை. ” மீண்டும் ஒருமுறைநெடுநாள் முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து போன சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு அவர் அழைத்ததற்காக மட்டுமில்லாமல் திருமணத்திற்கு ஒரு நடிகை வரவிருக்கிறார் என்ற காரணத்திற்காகவும் திருமணத்திற்கு மனைவியோடு செல்லும் ஒருவன் அசாதாரண சந்தர்ப்பம் ஒன்றில், திருமணத்திற்கு முதலில் வருவார் என சொல்லப்பட்டு பின்னர் வருவது இரண்டு அர்த்தம் தான் என சித்தப்பாவால் சொல்லப்பட்ட நடிகையை அந்த பிரமாண்டமான திருமண மண்டபத்தில் ஒரு அறையில் சந்திக்கிறான். எதேச்சையாக முத்தம் ஒன்றை பெறுகிறான். நடிகையை பார்த்ததாகச் சித்தப்பாவிடம் சொல்ல நடிகை திருமணத்திற்கு வரவேயில்லை என்கிறார்.சிறப்பான கதை.

கதைகளை வாசிக்கையில் ஒரு சில பத்திகளை விட்டு விட்டு வாசித்து விட்டோமா என்ற உணர்வு எழுந்து மீண்டும் வாசிப்பதை தவிர்க்க முடியவில்லை. சிறந்த அனுபவம்.

புலி உலவும் தடம்மு.குலசேகரன்

காலச்சுவடு பதிப்பகம்

முந்தைய கட்டுரைமறக்கப்பட்ட மேதை- ஹன்னா அரெண்ட்
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித் – உரையாடல்