அஞ்சலி: கோவர்தனன் மணியன்

நண்பர் கோவர்தனன் மணியன் ஈரோட்டில் அறம் வெளியீட்டு விழா நிகழ்வில் ஒரு வாசகராக தன் துணைவியுடன் வந்து அறிமுகம் செய்துகொண்டார். அவரும் அவர் மனைவியும் ஆசிரியர்கள். தமிழ் பொது இலக்கணத்தை தேவையானவர்களுக்கு இலவசமாக இணையத்தில் கற்றுக்கொடுக்கும் பணியை ஒரு சேவையாக செய்துகொண்டிருந்தார்கள். அதன்பின் தொடர்ச்சியாக நட்பில் இருந்தனர். குக்கூ அமைப்புடன் அணுக்கமானவர்கள். தமிழ்விக்கி பங்களிப்பாளர்குழுவிலும், விஷ்ணுபுரம் நண்பர் குழுவிலும்  கோவர்தனன் இருந்தார்.

கோவர்தனன் ஓராண்டுக்கு முன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிழ்ச்சையில் இருந்தார். நண்பர்கள் உதவியுடன் மீண்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றார். நேற்று காலமானார். நண்பருக்கு அஞ்சலி

 

 

முந்தைய கட்டுரைஎளிமையெனும் விடுதலை
அடுத்த கட்டுரைஅறியப்படாத எழுத்தாளனும், அணுக்க வாசகனும்