USAWA என்னும் இலக்கிய இதழில் ஆனையில்லா கதையின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. சுசித்ரா ராமச்சந்திரன், பிரியம்வதா ராம்குமார் இருவரும் மொழியாக்கம் செய்துள்ளனர்.
ஆனையில்லா என் புனைவுக்களியாட்டுக் கால கதைகளில் ஒரு அரிய தொடக்கமாக அமைந்தது. ஆனை என வந்த ஒன்றை குழந்தை என மாற்றிக்கொள்ளும் கதை. அன்றைய கோவிட் தொற்றுக் காலகட்டத்தை நான் எதிர்கொண்ட மனநிலையும் அதுவே. ஒட்டுமொத்த புனைவுக் களியாட்டுக் காலகட்டக் கதைகளின் அடிப்படை தரிசனம் இக்கதையில் உள்ளது.
ELEPHANT ! – USAWA – Magazine
ஆனையில்லா என்ற பேரிலேயே அந்தவகை கதைகள் தொகுக்கப்பட்டன. புன்னகைக்கச் செய்யும் கதைகள். ஆனால் மானுட அபத்தத்தைச் சொல்வன அல்ல, மானுடவாழ்வின் அழகையும் கொண்டாட்டத்தையும் சொல்வன. அவ்வகையில் அக்கதைகளின் உலகம் வைக்கம் முகமது பஷீருக்கு அணுக்கமானது. தனிப்பட்ட முறையில் நான் மீண்டும் மீண்டும் வாசிக்கும் கதைகள் இவை. இவற்றில் என் அப்பா ஒளியுடன் பிறந்து எழுந்து வந்து என்னுடன் விளையாடுகிறார்.
புனைவுக்களியாட்டுக் கதைகள் நூல்வடிவில்