பனிவெளியின் கதைகள்

தங்கப்புத்தகம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் என்ற நூலை திரும்பத் திரும்ப பித்துப் பிடித்தவனாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும்கூட அந்நூலை கடந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. முக்கியமாக கரு. அந்தக் கதை எதைச் சொல்கிறது என்பது ஒவ்வொரு வாசிப்பிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. திபெத் என்ற கனவுநிலத்தில் நடைபெறும் கதைகள் அவை. திபெத் இந்தியாவின் சப்காண்சியஸ் என நினைக்கிறேன். அங்கே எதுவேண்டுமென்றாலும் நிகழும். அற்புதமான கதைகள். தியான அனுபவம் போன்ற கதைகள். தங்கப்புத்தகம் ஓர் அழகான கதை. இந்தக்கதைகளெல்லாமே ஒரே மூச்சில் எழுதப்பட்டவை என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.

சந்திரசேகர் ஆர்.எம்

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் அற்புதமான தொகுப்பு. அந்த தொகுப்பிலுள்ள எல்லா கதைகளையும் நான் என் வீட்டில் மாலையில் குழந்தைகளிடம் பேசும்போது டிரமாட்டிக் ஆகச் சொன்னேன். என் குழந்தைகள் உயர்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள். தமிழ் வாசிக்கமுடியாது. ஆனால் அவர்கள் அனைவருக்குமே திபெத் பற்றிய ஒரு கனவு உண்டு. ஆகவே கதைகளை மிக விரும்பி கேட்டார்கள். ஆன்மிகமான கதைகள். ஆனால் திரில்லர் போல அழகான கதைவடிவத்துடன் அமைந்துள்ளது எல்லா கதைகளுமே. கரு, தங்கப்புத்தகம் எல்லாமே பரபரப்பான கதைகள்.

ஆர். நிர்மல்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைபேசுவதும் சிந்திப்பதும்…
அடுத்த கட்டுரைஒரு சிறுவனின் கடிதம்