ஆளுமைகள், கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இன்று இரு கலைஞர்கள் என்ற தொகுப்பை வாசித்தேன். ஓராண்டாக இந்த புத்தகம் என் கையில் இருந்தாலும் இன்றுதான் வாசிக்க முடிந்தது. அற்புதமான கதைகள். எல்லாமே மெய்யான ஆளுமைகளைப் புனைவாக ஆக்கியவை. இந்தவகை கதைகள் தமிழில் அதிகமில்லை. மெய்யான ஆளுமைகளை அப்படி புனைவாக ஆக்கலாமா என்ற கேள்விதான் எழும். அதில் புனைவேது உண்மை ஏது என்ற கேள்வி வரும்.

ஆனால் மெய்யான ஆளுமைகளை முழுமையாக எவராலும் கதையாக ஆக்கமுடியாது. அவர்களில் வெளிப்படும் ஒரு துளி கதையாக ஆகிறது. ஒரு மேன்மை அல்லது சிக்கல் அல்லது சிலசமயம் சிறுமை. அந்த மெய்யான ஆளுமைகளை நினைவூட்டினால்தான் அந்தக்கதைக்கு மதிப்பு வருகிறது. இந்த கதைகளில் வரும் ஜெயகாந்தன் பிரமிக்கத்தக்க ஆளுமையாக உள்ளார். அந்த ஒரு கதையில் இருந்து ஜெயகாந்தனுக்குச் செல்கிறோம். திரும்ப கதைக்கு வருகிறோம். புனைவை எல்லையை அழித்து விரியச்செய்யும் கதைகள் இவை.

அமுதகேசவன். ஆர்

அன்புள்ள ஜெ

மதுரை சோமு பற்றிய கதை அருமை. அந்தக் கதையில் வரும் சோமுவை கண்டால் அப்படியே காலில் விழுந்துவிடவேண்டும். அவர் நம்மை கட்டிப்பிடித்தால் அதுதான் மோட்சம். என்ன ஒரு கிரேஸ்புல் ஆன கதை. அது சோமுவா என்பது முக்கியமல்ல. சோமு அப்படி ஒரு கதையாக ஆகும் தன்மையுடன் இருக்கிறார் என்பதே முக்கியமானது.

ராஜ்குமார் கிருஷ்ணா

 

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைசைவம், கடிதம்
அடுத்த கட்டுரைஜே.டி.ஆர்