ஒரு தொடக்கம்- கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடிதம்

எனது பெயர் நவின் சொந்த ஊர் தோவாளை. தற்போது இராணிப்பேட்டை மாவாட்டம் வாலாஜா வில் வசித்து வருகின்றன். 2023 டிசம்பரில் தான் Master’s  of Physiotherapy in Neurology யில் கோவை KMCH மருத்துவ கல்லூரியில் படித்து முடித்தேன். உங்களை எனது 16 வயதில் இருந்து படித்து வருகிறேன். உங்கள் எழுத்து எனது வாழ்வில் பல வெளிச்சத்தை தந்தது. அதற்க்கு நன்றிகள் ஜெ.

இந்த ஆண்டில் புதிய முயற்சி எடுக்க உள்ளேன்.அதற்காக தான் இக் கடிதம்.

எனது முதுகலை ஆய்வை பக்கவாதம் தொடர்பாக மேற்கொண்டேன். பல பக்கவாத நோயாளிகளை இரண்டு வருடத்தில் கண்டுள்ளேன்.அவர்களிடம் உரையாடும் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.அதில் முதன்மையானது மக்களுக்கு பக்கவாதம் தொடர்பான விழிப்புண்ர்வு இல்லை. பக்கவாதம் வந்தால் வாழ்க்கை இழந்த போன்ற உளவியல் சிக்கலில் மக்கள் உள்ளனர்.

அதற்காக நான் ஒரு சிறிய முயற்சி செய்ய உள்ளேன். தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பக்கவாதம் தொடர்பாக விழிப்புணர்வு , பக்கவாதம் வராமல் தடுக்க வழிமுறைகள் மற்றும் வந்தால் அதில் இருந்து மிள இருக்கும் வழிமுறைகள் முக்கியமாக என் துறையாக இயன்முறை மருத்துவத்தில் (Physiotherapy) இருக்கும் சிறப்புகள்  மேலும் மலைகிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தளாம் என்ற திட்டதில் உள்ளேன். திட்டத்தை வரையுரை செய்த உடன் உங்களை தொடர்பு கொள்கிறேன்

எனது ஆசிரியர்களில் முதன்மையானவர் நீங்கள் தான்இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்த்துகளையும் ஆசிகளையும் எதிர்பாத்து காத்து கொண்டு இருக்கேன் ஜெ.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெ

குறிப்பு: உலக பக்கவாத தினத்தில் நான் எழுதிய கட்டுரை இணைப்பை இணைத்துளேன்

வாய்ப்பு கிடைத்தால் படிக்கவும்

Link:https://navinrkumarwrtires.blogspot.com/2023/10/world-stroke-day-october-292023.html

நன்றி

என்னும் உங்கள் வாசகன்

நவின் ஆர் குமார்

தோவாளை

அன்புள்ள நவீன்

சிறந்த முயற்சி. தொடர்செயல்பாடும் அதன் நிறைவும் அமையட்டும். இன்று மிகையுழைப்பு, மிகையுணவு, துயில்நீக்கம் ஆகியவை ஓங்கியிருக்கும் சூழலில் மிக அவசியமான ஒரு பெரும்பணி

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைசுற்றிலும் ஒலிக்கும் குரல் – கடிதம்
அடுத்த கட்டுரைகுருகு- யட்சகானம், முருகனின் உருவங்கள்…