பாலையும் காதலும்- கடிதம்

அல் கிஸா மின்னூல் வாங்க

அல்கிஸா வாங்க

இரு களங்களில் நிகழும் கதை அல்லது நாவல் என்றாலே அதனை ஒப்பு நோக்கி இரண்டுக்குமான ஒற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை , முரண்களை ஒருவாறு தொகுத்து அந்த படைப்பை  நினைவில் வைத்திருப்பேன்

அவ்வாறாக அல்கிஸா படிக்கையில் நான் கண்டடைந்தது 

வேறுபாடுநாவலின் முடிவில் ஓர் தரிசனமாக அந்த வேறுபாடு ஒன்றுபட்டது . ஆனால் அது ஆசிரியரின் மொழியில் உருவகமாக வந்தமைந்தது. முதல் அத்தியாயத்திலிருந்தே நீரின் பல பரிணாமங்கள் , நிகழ்தல்கள் என ஒன்றன்பின் ஒன்றாக உருவகமாக வந்தவண்ணம் இருந்தன

உதாரணமாக அஜ்மீரின் தெருக்களில் உள்ள கூட்டத்தை பற்றிய விவரணைகளில்சுழித்தன , பொழிந்தன , பேரருவி போன்ற நீரின் நிகழ்வுகள்’ . முதலில் சாதாரணமாக நெரிசலானவற்றை பார்த்தவுடன் தோன்றும் ஓர் உருவகமாக இருக்கலாம் என்று கடக்க எண்ணினாலும் அதை ஓர் ஒராமாய் மனது அசைபோட்டுக் கொண்டிருந்தது

நாவலின் மற்றொரு களமான கர்பலா போர்களம் ஓர் பாலை நிலம் . தகிக்கும் வெயிலின் நிலமான பாலையில் நீர் என்பது  மூச்சு போன்றது . நாவலின் இவ்விரு களத்தையும் பொருத்திப்பார்த்தபோது இந்த முரண் அல்லது வேறுபாடு விந்தையாக பட்டது . உமையாவின் படைகள் அல்கமா நதிக்கு இப்பால் இமாம் ஹூசைனின் படையை கர்பலா போர்களத்தில் சூழந்து முற்றுகையிடுகிறது . மொஹரம் மாதம் ஏழாம் நாள் நீரில்லாது போகவே 

ஹூசைன் படையின் குழந்தைகள் பெண்கள் வீரர்கள் அனைவரின் உதடுகளும் வற்றி உலர்ந்து உமிழ் ஈரத்தால் தாகம் தணித்துக் கொள்கின்றனர் . இமாம் தலைமையிலான கடைசி சலாஹ்வின் போது ஹூசைன் படையில் வீரர்கள் பெண்கள் அனைவரும் மணலால் வஸு செய்து கொள்கின்றனர்

தன் குலத்தின் மக்களை காக்க ஹூசைன் போர் செய்வது அல்லது உமையாவின் நான்காயிரம் வீரர் கொண்ட படையிடம் பணிவது என உமையாவின் படை தளபதி உபைதுல்லா உரைக்கிறான். இறைத்தூதரின் பெயரர் ஹூசைன் போருக்கு  முழுதுற முன்வருகிறார் . அதன் நிர்பந்தம் நீரினாலும் உறுதிபடுகிறது . உமையாவின் படைவென்று முன்னேறனாலொழிய ஹூசைன் குடும்பத்தினர் ஆதாரவாளர் அடங்கிய எழுபது பேருக்கு நீரில்லை . நா வறண்டு  உதடு வெடித்து உயரற்று பாலையின் மண்ணில் மடிந்து போய்விடகூடும் .

 ஹூசைன் படைதளபதி அப்பாஸ் உமையா படையை கடந்து அல்கமா நதியில் தோல்பையில் நீர் நிரப்பி திரும்பும் வழியில் உமையா படையினரால் வெட்டி வீழ்த்தப்படுகிறார்ஹூசைன் அஸ்கருக்காக எதிரிகளிடம் மன்றாடுவதும் நீருக்காகவே . ஆனால் இரக்கமின்றி அந்த சிசுவையும் உமையா படையின் அம்பு ஏறி கொல்கிறது . குருதி வடிந்து மடிகிறது குழந்தை . ஈரம் வடிந்து  . நீர் தவிர எந்த ஈரமும் குடிப்பதற்கல்ல

இமாம் ஹூசைனின் தியாகத்தினாலும்  குலம் காக்க உமையா படையின் ஐம்பதில் ஒன்றை படையாக கொண்டு போரிட்ட வீரத்தினாலுமே உமையாவின் படைகளை தாண்டி தங்கள் வழிதொடர்பவர்களான அன்று அந்த தர்காவில் கூடியிருந்த ஆயிரகணக்கானோரை அல்கமா நதிக்கு 

அந்த கர்பலா படுகளத்தில் உயிர்தியாகம் செய்து கூட்டி செல்கிறார்கள்  . வெற்றியின் பெயரால் அல்ல தியாகத்தின் பெயரால்அதனாலயே அவர்களின் வழிதொடர்பவர்கள் பொங்கி வழியும் அந்த அஜ்மீரின் தெருக்களையும் குவாஜா கரீப் நவாஸின் தர்காவில் கூடிய மக்களையும் நீராக உருவகம் செய்தது என தோன்றுகிறது .

முன்பு காட்டாற்றை போல இருந்த அதில் இப்போது ஆழ்கடலின் தனிமையும் ஆழமும் கூடியிருப்பதாக சிலர் சொன்னார்கள்

உஸ்தாத் படே சாஹேப்ன் குரலை பற்றிய இவ்வரி மற்றொரு உதாரணம்

குதிரைகள் காலடிகளில் எழுந்த மண்துகள்கள் நீரைப்போலத் தெறித்துவிழ அதிலிருந்து நீராவியென புழுதி வானுயர எழுந்ததுஇந்த வரியை அதற்கு படிமமாக எண்ணிக்கொள்கிறேன்

*

கூட்டத்தில் இணைந்ததும் மனம் தனித்ததல்லஅது ஒவ்வொரு பொருட்களிலும் முகங்களிலும் காட்சிகளிலும் பட்டுச் சிதறி அர்த்தமின்றி மீ்ண்டு வரும் . அதை அள்ளித் தொகுத்தபடி ஒரு பொதுத் திசையில் நகர்ந்தபடி இருப்பதே செய்ய இயல்வது . அதுவும் ஒருவகைமுரக்கபா ” ( தியானம்

பெருங்கூட்டங்களில்  திரளுடன் முன்னேறும்போது  மனம் எதிர்வரும் முகங்களை கண்டு அலைக்கழித்தபடியே இருக்கும் . ஒருமனதாக சிந்திக்கலாகாதுசமூகமயாமாதலின் தர்மசங்கடமாக எனக்கு இது தோன்றும் . ஒருவரைகூட முழுமுகமாக பார்க்க முடியாது . கண்கள் முழு கோணங்களிலும் சென்று மீண்டு வரும் .எண்ணங்கள் தெளிந்திராது . எண்ணகூடவும் முடியாது . முகங்கள் அடுத்து முகங்கள் காட்சி அடுத்து காட்சியென அந்த தருணம் பல தருணங்களில் அங்கங்களானது . அந்த பெருந்திரளை விட்டுவிலகி தனித்து மீண்டும் அதை எண்ணினால் பல அனுபவங்கள் கிடைக்கும் . இந்த விஷயம் ஒருமனதால் கிடைப்பது அல்ல . மனதை பெரும் நதியாக பாவித்து நினைவின் அருவியில் விழ  ஒப்படைப்பது . ஒன்றையே அவதானிக்க விரும்பினால் அது அலைக்கழிப்புக்குள் போய் முடியும் . மனதை நதியென வைத்து பலவற்றை தொகுத்து அதை ஒரு தியானம் போலவும் ஆக்க முடியும் . இந்தமாதிரி தியானம்” எளிதில் நமக்கு அன்றாடங்களில் அமைகிறது .

*

இமாம் ஹூசைனின் தியாகத்தை படே சாஹிப் மர்ஸியா பாடலாக கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பேருக்கு பாடும் முன்னமே  வாசகர்களுக்கு அவற்றை ஒரு வரலாராக முந்தைய அத்தியாயத்தில் ஆசிரியர் தருகிறார் . அவ்வாறு  “அஷுராஎன்ற பத்தாம் நாளன்று படே சாஹேப்முன் தெரிந்த கதையையே  மர்ஸியா வாக கேட்க அந்த இரவின் கிஸாவின் கீழ்  ஆயிரக்கணக்கான பேர்களில வாசகர்களையும் ஓர் அங்கமென சேர்த்துக்கொள்கிறார் . அங்கு கூடியிருந்த அனைத்து ஷியாக்களுக்கும் சூஃபிகளுக்கும் வாசகர்களுக்கும் முன்னரே அந்த கதை தெரிந்திருந்ததால் அவர்கள் தங்கள் கைகளை  வான்வரை உயர்த்தி தத்தம் நெஞ்சில் அறையும் ஒவ்வொரு அறைதலையும் வாசகர்களும் அறைந்து உணர்ந்தவர்கள் ஆகுகிறார்கள்கூடவே ,ஆசிரியரின் சகோதரர்களே என்று கதைசொல்லியின் சொடுக்கல் தொடங்கி வரும் வரிகள் என்றும் நினைவிருப்பவைசொல்லப்போனால் ஒரு பத்தியின் முடிவில் வரும் அந்த  ” விளி வரிமொத்த பத்தியின் ஆத்மாவாக , அடித்தளாக அமைகிறது

*

தர்காவின் புனித வளாகமெங்கும் கொட்டிக்கிடந்த ரோஜாக்களின் வாசமும் , நிலவொளியும் அப்போது கவிந்த அந்த அமைதியை நிரப்புவது போல மெல்ல எழுந்து வந்தன .  

இவ்வரியை வாசிக்கும்போது பெரும் பரவசம் அடைந்தேன் . அமைதி , வாசம் இரண்டிற்கும் 

மூலம் காற்று . ஆனால் இவை இரண்டும் தத்தம் அளவிலேயே ஒவ்வொன்றிற்கும் தூரமாக நிற்பது . அமைதியின் போது நம் காது  நம் மூச்சை கேட்கும் . ஐம்புலன்களில் நம் காதுக்கு பெரிய வேலை இல்லை என்றால் மூக்கு இருமடங்கு கூர்கொள்வதை பலமுறை அனுபவங்கள் வாயிலாக பெற்றது உண்டு .   அப்போது  நாசி அந்த அமைதியில் கூர்ந்து முகர்ந்து அந்த கணத்தின் வெளியில் காற்றை  வெறும் மணத்தால் பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கும்இப்போது எண்ண பல நினைவுகள் மணங்களின் வாயிலாக நினைவிலெழுகிறதுகூடவே, இவ்வரியிலிருந்து  நீண்ட தூரம் செல்ல முடிகிறது . ஒலி , ஔி யென வாழ்வின் அடிப்படைகளை பதிவு செய்து மீள்பார்வை , மீள்கேட்டல் சாத்தியபட்டிருப்பது தொடர்ந்து 

மணத்தை இன்னமும் பதிவு செய்யாமலிருப்பது ஏன் ? ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற காற்று அடைக்கும் இயந்திரம் வந்தாலும் துய மணத்தை பதிவு செய்யும் இயந்திரம் வந்தால் நிகழும் புதுமைகளை எண்ணி பார்க்கும்போது மனம் பேரெழுச்சி கொண்டதுசில குறிப்பிட்ட வரிகளை திரைக்காட்சியாக கற்பனை செய்யும் பழக்கத்தினாலேயே எனக்கு இந்த எண்ணம் கமழ்ந்தது

*

உஸ்தாத் படே குலாம் அலி கான் சாஹேப் பாடும் அந்த மர்ஸியா பாடலை கேட்க மொஹரம் பத்தாம் நாள் அன்று அஜ்மீரின் தர்காவில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த  அந்த மகத்தான இரவின் போர்வையின் இரு நுனிகளென ஹைதரும் சுஹாராவும்

தோன்றுகின்றனர் . காதலால் சுற்றியிருக்கும் அனைத்தையும் வெறும் நிழல்களாக அர்த்தமற்றதாக உணரும் சுஹாரா கர்பலா படுகளத்தில் தன்னுயிரை தியாகம் செய்யும் இமாம் ஹூசைன் பற்றி 

படே சாஹேப் பாடும்போது பரவசம் கொள்கிறாள் . சற்றுமுன் சுற்றிலும் அரத்தமற்றது என உணர்ந்தவள் இமாம் ஹூசைனின் அந்த தியாகம் , சூழ இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தததை பார்த்து  ” பல அங்கங்கள் கொண்ட பெருவுயிர்என அந்த மொத்த கூட்டத்தையும் நினைத்து மனவெழுச்சி அடைகிறாள் . சுஹாராவை கண்டு நஸர் ஏ வஜ் எனும் வழியில்  இறைவனை காணும் ஹைதர் மர்ஸியாவின் ஹூசைன் தியாகத்தின் போது நெகிழ்ச்சியில் 

அந்த பெருவுயிரின் ஓர் அங்கமாக வானுயிர கைககள் உயர்த்தி நெஞ்சில் அறைந்து கொள்கிறான்இவர்களில் நானும் ஒருவன் என கூறி அறைந்து கொள்கிறான் . சுஹாராவும் அறைந்து அந்த பெருவுயிரின் ஓர் அங்கமாக ஆகிறாள்இருநுனி கொண்ட வாளென மிரட்டும்  ஹைதரின் கண்கள் செம்பட்டுத்துணியான  சுஹாராவை ஒன்றும் செய்யவில்லைஅணைத்துக்கொள்கிறது . காதலால்ஒரு நேரம் சுற்றியிருப்பவை எல்லாம் அரத்தமற்றதாக ஆவதும் மற்றொரு நேரம் பெரும்பரவசமாக ஆயிரகணக்கான அங்கங்கள் கொண்ட உயிர்களாக ஆவதும் காதலால் தான் . ஆனால் முதல் காதல் இரண்டாம் பட்சமே , மனிதன் மனிதன் மேல் கொள்ளும் காதல் . இரண்டாவது காதல்  காதல் நாம் இறைவன் மீது கொள்ளும் காதல்  இறைவன் நம் மீது கொள்ளும் காதல்மொஹப்பத் ” . அந்த காதலாலயே  இறைவன் பரந்து விரிந்த இந்த உலகை படைத்தான் . பாலையின் முழு பரிபூரண சந்திரன் போன்ற காதல் . மகத்தானவன் அவன் . ” யா அல்லா யா அலி யா ஹூசைன் ” .

சந்துரு

முந்தைய கட்டுரைகமல் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.வரதநஞ்சைய பிள்ளை