பைபிளை அறிதல்… கடிதம்

பைபிள் வகுப்பு குறித்து உங்களுக்கு நேற்றே எழுதுவதாக சொல்லி இருந்தேன்.

முதல் நாள் வகுப்பில் பைபிள் நூல் அமைப்பு, காலகட்டம், நிலப்பகுதி, அதன் கதைக்கூறல் முறைகள் மற்றும் வகைகள், பைபிள் வாசிப்பில் உள்ள சிக்கல்கள், ஒன்றை ஒன்று முரண்படும் கதைகள், முரண்பாட்டின் காரணங்கள், அது தொகுக்கப்பட்ட முறை குறித்து ஒரு முன்னுரை போல் சிரில் சார் வழங்கினார்.

அதன் பின் பைபிள் வாசிப்பு, கதைகளுக்குள் சென்று விட்டோம். தொடர்ச்சி அறுபடாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை சிரில் சார் வாசித்து வந்தார். கதைப்போக்கில் இருக்கும் மனநிலைகள், இறை வடிவம் மற்றும் அதன் வடிவ மாற்றங்களை, பண்பாட்டின் பரிணாமங்களை சுட்டிக்காட்டியபடி வந்தார். இதில் இருக்கும் தர்கத்திர்க்குறிய சர்ச்சைக்குரிய கேள்விகளையும் கேட்டு வந்தோம். பைபிளில் பெண்ணியம் குறித்தும் கேட்டு வந்தோம். அவற்றிற்கு பைபிளில் இருந்தே சில வாக்கியங்களை கொண்டு பதில் அளித்தார்அடிப்படை பக்தி நம்பிக்கை சார்ந்த கேள்விகள் தவிர்க்கப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் பைபிள் எப்படி  விளங்கிக்கொள்ளப்படுகிறது. Interpretation இல் செய்யப்படும் திருத்தங்கள், வெவ்வேறு நில பரப்பில் அதன் மதம் சார்ந்த சட்டங்கள் எப்படி செயல் படுகின்றன என்பவை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளித்தார்

முதல் நாள் வகுப்பில் மட்டும், புதிய நிலமும் பெயர்களும் நினைவில் நிறுத்திக்கொள்ளாத நிலையில் புதிய ஏற்பாட்டின் சம கால நூல்கள் குறித்து சொல்லப்பட்டது, சற்று அதிகமாக இருந்தது. எனக்கு அதை உள் வாங்கி கொள்ள சிரமமாக இருந்தது. மற்றபடி, பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் இருக்கும் இறையியல் சார்ந்த வேறுபாடுகள், 4 நற்செய்திகளில் இருக்கும் வேறுபாடுகள் குறித்து சொன்னது எனக்கு முக்கியமானதாக இருந்தது. ஓரிறைவாதம் மற்றும் திரித்துவம் நோக்கி அவர்களின் நகர்வு குறித்து பேசினார். ஆனால் அதற்கு கீழை நாடுகளின் கலாச்சாரங்களின் தாக்கம் இருந்ததா என்று தெரியவில்லைஇதை சிரில் சார் இடம் நான் கேட்டு இருக்கலாம். அப்போது கதைகளில் தான் என் கவனம் இருந்தது. வகுப்பு குறித்து நீங்கள் கேட்டதும் எனக்கு இது நினைவில் வந்தது. நான் மேற்கொண்டு படித்து விட்டு தான் இது குறித்து கேட்பேன்.

பல கதைகளை உள்ளடக்கிய ஒரு நாவல் போல் பைபிள் விரிகிறது. நான் புரிந்து கொண்ட ஒன்று, எல்லா நில பரப்பிலும் தொன்மங்கள் ஒன்று போல இன்னொன்று இருக்கின்றன. மனிதனின் அடிப்படை குணங்கள் எங்கும் ஒன்று தான். இயேசுவை பற்றிய கதைகள் எனக்கு காந்தியையும் கண்ணனையும் நினைவு படுத்தி கொண்டிருந்தன.

 மூன்று நாளில் முழு பைபிளையும் வாசித்தது போல் உணர்வுதேவதேவன் sir உம் அவரது பார்வையை முன் வைத்த வண்ணம் இருந்தார். அவரோடு கவிதை சார்ந்த உரையாடல்கள் நன்றாக இருந்தன. மணி அண்ணனுடன் சில உரையாடல்கள் என இனிமையும் சிரிப்பொலிகளும் நிறைந்த நாட்கள்.

உங்களுக்கும் சிரில் சார்க்கும் நன்றிகள்மற்றும் என் கேள்விகளை தெளிவு படுத்தி கேட்ட கிருஷ்ணன் சார்க்கும் நன்றிகள்.

அன்புடன்,

சரண்யா

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம், 53
அடுத்த கட்டுரைகிருமி, ரே பிராட்பரி- கடிதம்