மகத்தான இரவின் துஆ

அல் கிஸா வாங்க

அல்கிஸா மின்னூல் வாங்க

அல்கிஸா சில சொற்கள் அஜிதன்

குவாஜா மொய்னுதீன் ஷிஷ்டி தர்காவில் 1960 களின் மொஹரம் பத்தாம் நாள் –  உஸ்தாத் படே குலாம் அலிகானின் மர்ஸியா எனப்படும் ஹுசைனின் உயிர்த்தியாக காவியத்தை தன் தள்ளாத வயதில்  பாட அங்கு கூடியிருக்கும் பல்லாயிரம் மக்கள் திரளில் முன் பின் அறியாத ஹைதர்சுஹரா வின் காதல்அனைத்தும் இறைவனின் ஆணைப்படி என்பதற்கேற்ப அந்தக் கணத்தில் நிச்சயிக்கப்படுகிறது.

நபிகளின் வழித்தோன்றலாகிய ஹுசைன் தமது குலத்துக்காக உபைதுல்லாவுடன் போரிடும்  காவியம் உஸ்தாதின் பாடல் மூலமாக அஜ்மீர் குவாஜா மொய்னுதீன் ஷிஷ்டி தர்காவில் விரியும் போது பதின் வயது ஹைதரும் சுஹராவுக்கும் இடையே மலரும் மொழியில்லா காதலே அல் கிஸா.

பெரும் நாடகீய தருணங்கள், மனவோட்டங்கள், திருப்பங்கள் இல்லாத எளிமையான கதைஆனால் தன்னளவில் உச்சத்தை தொடும் இடம் ஒன்று

ஹைதரும் சுஹராவும் தர்காவில் இருந்து இருப்பிடம் திரும்புகிறார்கள்.இருவருக்கும் காய்ச்சல்,குலாம்,ஹைதர்சுஹரா பற்றி தன் சகோதரியிடம் தெரிவிக்கிறார்,ஹைதர் தன் அன்னை மாடி சாய்ந்து காய்ச்சலில் உரு வெளி கனவொன்றை காண்கிறான். அந்த கனவின் விவரிப்பில் இந்த நாவல் தன்னளவில் உச்சமடைகிறது.

இரண்டு வேறுபட்ட மொழிகளை இந்த நூல் கையாள்கிறது.ஒன்று கதைக்களத்தை விவரிக்கும் மொழிசொல்லெண்ணி எழுதப்பட்ட தேய்வழக்கு இல்லாத மொழி.இரண்டாவது மார்சியா படுகளத்தை அரேபிய சொற்கள் கொண்டு விவரிக்கும் மொழி.இரண்டிலும் சிறிதும் குறையாத வாசிப்பின்பம் கொண்டு இருக்கிறது.

ஒரு நவீன வாசகன் அல் கிஸா வை எங்கு பொருத்தி கொள்வது ? ஹைதரும் சுஹராவும் தர்காவில் இருந்து திரும்பிய பிறகு இயல்பாகவே வாசகன் இது ஒரு மென்சோக காதல் கதை என்ற முடிவை நோக்கி செல்லஇல்லை இது அனைத்தும் இறைவனின் ஆணைப்படி அந்தக் கணத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதாக நம்பிக்கை ஊட்டுவது நேர்நிலையாக வாசகனுக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது.

ஆம் இது மகத்தான இரவின் பிரார்த்தனை.

பிகு:

மைத்ரி வாங்கி வந்தவுடன் வாசித்துவிட்டேன்.கடிதம் அனுப்பவில்லைவருந்துகிறேன்.அல் கிஸா வை நான் சென்ற ஜூலையில் கோவை புத்தக திருவிழாவில் அஜியின் ஒப்பமிட்டு வாங்கிவந்தது.இவ்வளவு நாள் பிந்தி விட்டுவாசித்து எழுத.

2012 இல் இருந்து நான் ஜெ வை வாசித்து வருகிறேன்தொடர்ச்சியான கட்டுரைகளின் மூலம் அஜி ஒரு இளவல் என உடன் வளர்ந்து வந்தவர்.இளவலின் இந்த படைப்புகள் உண்மையில் நிறைவை தருகின்றன.

வாழ்த்துக்கள் அஜி.

நன்றி.

பிரகாஷ்

கோவை

முந்தைய கட்டுரைதயக்கம், கடிதம்
அடுத்த கட்டுரைஆ.பூவராகம் பிள்ளை