2023 புதிய வாசகர் சந்திப்பில் எனது ‘மருள்’ கதையை நீங்கள் வாசித்து அது குறித்து பேசுனீர்கள். பின்னர் விகடனில் வெளிவந்த அந்தக் கதை எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒன்றாக இருந்தது.
அந்தக் கதையின் பெயரில், அதற்கு முன்பு அரூ, யாவரும் உள்ளிட்ட இதழ்களில் எழுதிய கதைகளையும் பின்பு எழுதிய கதைகளையும் தொகுத்து நூலாக புத்தக காட்சியில் வெளியிட்டோம்.
யாவரும் ஜீவ கரிகாலனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனது கதைகள் மீதான அவரது அபிப்பிராயம் என்னால்கூட என் மீது உருவாக்கிக் கொள்ள இயலாதது.
ரம்யா அவர்களின் நீலத்தாவணி வெளியீட்டின்போதே எனது தொகுப்பும் அதே அரங்கில் வெளியிட்டப்பட்டது. புதிய வாசகர் சந்திப்பில் இருவரும் கதைகள் எழுதியிருந்ததையும் ஒரே நேரத்தில் வெளியீடு காண்பதையும் நான் நினைத்து கொண்டேன்.
எழுத்தாளர் காளி ப்ரஸாத் நூலுக்கு முன்னுரை அளித்ததோடு அது குறித்து அரங்கில் பேசவும் செய்தார்.
இதெல்லாம் நல்லூழ் என எண்ணிக் கொள்கிறேன். உங்களுடன் இதனைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன் ஜெ.
நன்றி!
பிரபாகரன் சண்முகநாதன்