பின்பின்நவீனத்துவம் – கடிதம்

இந்த சிறு கட்டுரையை ஆச்சரியமாக இப்போது தான் கண்டடைந்தேன். என் உரைக்கு நான் உண்மையில் trans modernism என்ற பெயரை மட்டுமே எடுத்துக்கொண்டேன், ஒரு புதிய யுகத்தின் பெயராக அதன் அர்த்த சாத்தியங்களே என்னை தூண்டியது . இதில் நான் உள்ளுணர்வால் என் படைப்புகள் மற்றும் முக்கியமான பிற சமகால படைப்புகள் வழியாக சென்றடைந்த பல கருத்தாக்கங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன. உதாரணமாக இறப்பை “ஏற்றுக்கொண்டு முன்னகர்தல்”, “மற்ற” பண்பாடுகளின் இன்றியமையாமை, தெய்வீகம் என்னும் உணர்வு உயர் விழுமியங்களின் குறியீடாக மீண்டும் பிறப்பெடுத்தல், போன்ற கருத்துக்கள்…

நேற்று உரையாடலில் ஓர்  நண்பர் கூறினார், “இது மிகவும் vague ஆன வரையரையாக இருக்கிறதே” என. உண்மையில் இந்த தெளிவில்லாமையே இதன் விரிவின் ஆதாரம். இது ஒரு தத்துவம் அல்ல, மாறாக இனி வரப்போகும் தத்துவ சிந்தனைகளின் செல் திசையை குறிக்கும் குடைச் சொல்.

அஜிதன்

http://www.integral-review.org/issues/vol_9_no_2_ateljevic_visions_of_transmodernity.pdf

முந்தைய கட்டுரைகன்னிநிலம், வாசிப்பு
அடுத்த கட்டுரைநாவல்கலை- ஒரு பார்வை