என் நண்பரும் விமர்சகருமான எம்.வேதசகாயகுமாரின் மாணவர்கள் அவருக்காக ஆண்டுதோறும் நடத்தும் நினைவுகூர்தல் நிகழ்வு 11 ஜனவரி 2024 காலை பாலக்காடு அருகே சித்தூர் கலைக்கல்லூரியில் நிகழ்கிறது. வேதசகாயகுமாரின் விமர்சன மரபு என்னும் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.
11 காலை கோவையிலிருந்து கிளம்பி சித்தூர் செல்வதாகத் திட்டம்.