கர்நாடக மாநிலமெங்கும் பல நாடகங்களை மக்கள் மத்தியில் அரங்கேற்றுகிறார் காரந்த். நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றுகிறார். சிவராம் காரந்த் தனது சொந்த ஆர்வத்தால் இளமைக் காலத்துக்குப் பின் நாட்டியம் பயின்று ஒரு நாட்டியக் கலைஞராகிறார். யக்ஷ கானம் கலைக்கு புத்துணர்வு தருவதில் முக்கியப் பங்காற்றுகிறார்.