கிராவின் உலகம்

கி.ராஜநாராயணன் தமிழ் விக்கி

கி.ராஜநாராயணன் படைப்புகள், முழுத்தொகுதி. அகரம் பதிப்பகம்

அன்புள்ள ஜெ,

இந்த வாசிப்பு அனுபவ குறிப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதி வைத்தேன், இன்று இந்த பதிவை படிக்கும் பொழுது இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசை உண்டானது.

கரிசல் காட்டு கதை சொல்லி என்று அழைக்கப்படும் கிராவின் மாயமான் சிறுகதை தொகுப்பை நண்பர்களின் சிறுகதை விவாதத்திற்க்காக படித்தேன் .

அதற்கு முன் அவரின் எழுத்துக்களை படித்தது இல்லை, ஆனால் அவரை பற்றிய கட்டுரைகள் , ஒளிப்படம் மற்றும் விமர்சனங்களை வாசித்திருந்தேன். அவரை பற்றிய ஒரு பிம்பம் எனில் தோன்றியிருந்தது, அவர் கரிசல் காட்டை பற்றியும் அதை சுற்றி இருந்ததையும் பற்றி எழுதும் எழுத்தாளர் என்ற புரிதல் .

அதனால்தான் அவரை கரிசல் காட்டு கதை சொல்லி என்று அழைக்கிறார்கள் என்று .ஆனால் அவரது இந்த சிறுகதைகளை படித்தவுடன் அவரைப்பற்றிய அனைத்து பிம்பங்களும் உடைந்தது , திண்ணையில் உட்கார்ந்து அந்த ஊர் மக்களிடம் கதை கேட்கும் ஒரு அனுபவத்தை தரும் கதைகள் .

அவர் கதைகள் நமக்கு தந்தது அவரின் கதை மாந்தர்களை தானே தவிர அந்த மன்னையல்ல, கோமதி,  பேச்சி, அண்ணாரப்பா கவுண்டர், மற்றும் அவரது ஒவ்வொரு கதாபாத்திரமும் கரிசல் காட்டில் அடைபடுபவர்கள் அல்ல உலக கதைமாந்தர்கள் மனிதத்தின் மாந்தர்கள் . தங்கர்பச்சான் அவர்களின் ஒரு பேட்டியில் கிரா அவர்களிடம் நீங்கள் இடைசல் போக விருப்பம் இல்லையா என்று கேட்க்கும்பொழுது , கடந்த 15 வருடங்களில் அவருக்கு அந்த எண்ணம் என்றும் வந்தது இல்லை என்றும் கூறுவர் , அதற்கு அவர் கூறும் காரணத்தின் சாரம் அவருக்கு உரையாட மனிதர்கள் இருந்தமைதான். அகழியில் இருக்கும் முதலைக்கு அகழியே சொர்கம் .

இக்கதை தொகுப்பில் அனைத்து கதைகளும் அருமை , என்னை மிகவும் கவர்ந்த கதைகள் கோமதி , புறப்பாடு , குருபூசை , நிலை நிறுத்தல் .

கோமதியின் கதாபாத்திரத்தையும் விவரிப்பதில் இருந்து அவள் எங்கும் நிரந்தரமாக வேலை செய்வதில்லை சொல்லாமல் கொள்ளாமல் இன்னொரு வீட்டிற்கு சென்று விடுவாள் என்ற வரியை படிக்கும் பொழுது நிலை நிறுத்தல் கதையில் மசானதிற்கு அடிவாங்கி வந்த அறிவு கோமதிக்கு உள்ளுணர்வாள் வந்திருக்கலாம் அல்லது அவமானங்கள் அவளுக்கு கற்று தந்த படமாக இருக்குமோ எனத்தோன்றுகின்றது,சமூகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் மனிதன் தன்னுணர்வு உள்ளவனாகவும் , தனது தன்மானத்தை நிலைநாட்ட மவுனத்தின் அல்லது அழுகையின் மூலமாகவோ   முனைகிறான் அந்த மாந்தர்கள் தான் அவரது கதைநாயகர்களாக இருக்கிறார்கள் .

கோமதி பெண்சாயல் பற்றி சொல்லும்போது அந்த கதாபாத்திரத்தை கட்டமைக்க ஆரம்பித்திறுருப்பர்  சுலோவின் சேலையையும்பார்கும்போல்  நகைகளையும்  பார்த்து ஆசைப்படுவது என்று அடுத்த கட்டத்திற்கு செல்லும் .

அவள்பாடும் ஒப்பாரி நமது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் , ரகுவின் புகைப்படத்தை பார்த்து அழும்பொழுது, ஒரு நிறைவேறப்போகாத ஆசையை நினைத்து அழுகிறாளா அல்லது தனது பிறப்பை நினைத்தா என்று எண்ணத்தோன்றுகிறது .

நிலை  நிறுத்தல் கதையில், மாசாணம் உண்பதை “பருப்புக்கு கறியை சிக்கனமாக சிந்தாமல் சிதறாமல் உணவின் அருமை தெரிந்து எடுக்கிறது , வாய் ஆடம் தெரிந்து ” என்பதை படிக்கும் பொழுது அதை திரும்ப திரும்ப படித்து சிலாகித்தேன் , அதன் பிறகு எதேச்சையாக ஆசான், கிராவின் “மிச்சக் கதைகள் ” வெளியிடும் அரங்கில் இதே வரியை புகழ்ந்து  பேசி கேட்கும் பொழுது மாசனத்தின் குடிசையில் ஆசானும் நானும் அருகே அமர்ந்து அவன் சாப்பிடுவதை ஏக்கத்துடன் பார்த்து ரசிப்பதுபோல் தோன்றியது .

அவரின் ஒவ்வொரு கதையும் என்னை கரிசல் காட்டில் அலையவிடவில்லை , விதவிதமான மனிதர்களுடன் பழக வாய்ப்பாக அமைந்தது .

என்றும் அன்புடன்,

கார்த்திகேயன் A.M

முந்தைய கட்டுரைபஞ்சமும் விடுதலையும்: வாசிப்பு
அடுத்த கட்டுரைசாலமன் பாப்பையா