அன்புள்ள நண்பர்களுக்கு
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் மறுஆக்கமான வெண்முரசு வெளிவந்த நாள் முதல் அதன் அனைத்துத் தொகுதிகளும் வாங்கக் கிடைக்குமா என்னும் கோரிக்கை இருந்துகொண்டிருக்கிறது. வெண்முரசு கடந்த பத்தாண்டுகளாகவே அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது, ஆனால் முழுத்தொகுதிகளும் உடனே கிடைக்கும் நிலை உருவானதே இல்லை. காரணம் இந்நூல் பெரியது என்பதனால் அச்சிட்டு தயாரிப்பது பெரும்பணி. கிட்டங்கியில் சேமிக்கவும் நிறைய இடம் தேவை. ஆகவே ஓரிரு நூல்கள் விற்பனைக்கு வரும்போது ஏற்கனவே வெளிவந்தவை விற்கப்பட்டு முடிந்திருக்கும்.
முதல்முறையாக இப்போது வெண்முரசின் எல்லா தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வெளியிடும் பெருந்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளோம். வெண்முரசு மொத்தம் 26 பாகங்கள் கொண்டது. ஓவியர் ஷண்முகவேல் வரைந்த 500க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களும் ஏறத்தாழ 21000 பக்கங்களும் கொண்ட இந்நீண்ட நாவல் தொகுப்பு செம்பதிப்பாக விஷ்ணுபுரம் வெளியீடாக இந்த ஆண்டு ஜுலை மாதத்தில் வெளிவரவுள்ளது.
தனித்தனி புத்தகங்களாக அச்சிடுவதில் ஏற்படும் விலை உயர்வை இந்த மொத்தப்பதிப்பில் தவிர்க்க முடியும் என நம்புகிறோம். நூல்களை மொத்தமாக தங்கள் நூலகத்திற்காக வாங்குபவர்கள், அன்பளிப்பாக பிறருக்கு அளிக்க விரும்புபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
வெளிவரவிருக்கும் வெண்முரசு முழுத்தொகுப்பின் விலை ரூ.38000/-. முழுத்தொகுப்பு வேண்டுவோர் ரூ.15000/- கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜுன் மாதம் 15ம் தேதிக்குள் முழுத்தொகையும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முழுத்தொகையும் செலுத்திய பிறகே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்திற்குள் மட்டும் தபால் செலவு இல்லை. பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தபால் செலவு தனி. வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் அல்லது வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நூலகங்களுக்கு அல்லது முதியோர் இல்லங்களுக்கு நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம். அவர்களின் பெயர் நூலில் எழுதப்பட்டு ஆசிரியர் கையெழுத்துடன் அளிக்கப்படும்.
நூல்களில் ஆசிரியர் கையெழுத்து வேண்டுவோர் பெயர் குறிப்பிடவும்.
மூத்தவர்களுக்கு பரிசாக அளிக்க விரும்புபவர்கள் அதை குறிப்பிட்டால் பரிசுப்பொட்டலமாக உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தங்களிடமிருப்பதில் விடுபட்ட நூல்களை முன்பதிவு செய்து பெற விரும்புபவர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தனியாக எழுதலாம்.
புத்தங்கள் அனைத்தும் ஜுலை முதல் வாரத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும்.
முன்பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 15, 2024
முன்பதிவு விவரங்கள்:
முழுத்தொகுப்புக்கான மொத்தத்தொகையும் முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு அதன் ஸ்க்ரீன்ஷாட் அல்லது Ref No, தங்கள் முகவரி மற்றும் கையொப்பம் பெற வேண்டிய பெயர் விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவேண்டும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் தங்களது பதிவு எண் கொடுக்கப்படும்.
***
ரூ 15000 செலுத்தி முன்பதிவு செய்ய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியபின் அதன் விவரம் (Reference No, Screenshot) பணம் செலுத்தியவர் பெயர், முகவரி, வாட்ஸப் எண் ஆகிய தகவல்களுடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் பதிவு செய்து கொண்டதற்கான பதிவு எண் அனுப்பி வைக்கப்படும்.
Curr Acc Name: VISHNUPURAM PUBLICATIONS
Curr Acc No: 214205001589 Bank: ICICI Bank Ltd IFSC: ICIC0002142 Branch: Vadavalli, Coimbatore, Tamilnadu Ph: 9080283887 |
***
B No | Book Name | MRP | Net |
1 | முதற்கனல் | 1500 | 1350 |
2 | மழைப்பாடல் | 2500 | 2250 |
3 | வண்ணக்கடல் | 2000 | 1800 |
4 | நீலம் | 1100 | 990 |
5 | பிரயாகை | 2600 | 2340 |
Round off | -30 | ||
மொத்தம் | 9700 | 8700 |
***
B No | Book Name | MRP | Net |
6 | வெண்முகில் நகரம் | 1800 | 1620 |
7 | இந்திரநீலம் | 1700 | 1530 |
8 | காண்டீபம் | 1400 | 1260 |
9 | வெய்யோன் | 1700 | 1530 |
10 | பன்னிரு படைக்களம் | 2000 | 1800 |
Round off | -40 | ||
மொத்தம் | 8600 | 7700 |
***
B No | Book Name | MRP | Net |
11 | சொல்வளர்காடு | 1900 | 1710 |
12 | கிராதம் | 2200 | 1980 |
13 | மாமலர் | 1700 | 1530 |
14 | நீர்க்கோலம் | 2000 | 1800 |
15 | எழுதழல் | 1700 | 1530 |
Round off | -50 | ||
மொத்தம் | 9500 | 8500 |
***
B No | Book Name | MRP | Net |
16 | குருதிச்சாரல் | 1600 | 1440 |
17 | இமைக்கணம் | 1000 | 900 |
18 | செந்நா வேங்கை | 1700 | 1530 |
19 | திசைதேர்வெள்ளம் | 1700 | 1530 |
20 | கார்கடல் | 1800 | 1620 |
Round off | -20 | ||
மொத்தம் | 7800 | 6300 |
***
B No | Book Name | MRP | Net |
21 | இருட்கனி | 1300 | 1170 |
22 | தீயின் எடை | 1100 | 990 |
23 | நீர்ச்சுடர் | 1200 | 1080 |
24 | களிற்றுயானைநிரை | 1500 | 1350 |
25 | கல்பொருசிறுநுரை | 1500 | 1350 |
26 | முதலாவிண் | 400 | 360 |
மொத்தம் | 7000 | 6300 |
***
மேலும் விவரங்கள் அறிய 9080283887 என்ற (வாட்ஸப்) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி
மீனாம்பிகை
விஷ்ணுபுரம் பதிப்பகம்