பனியில்… வாசிப்புகள்

பனிமனிதன் புதிய பதிப்பு  வாங்க 

பனிமனிதன் மின்னூல் வாங்க

ஜெயமோகன் புத்தகங்களை வாசிக்க எண்ணியபோது நான் விரும்பியது விஷ்ணுபுரம், காடு, அறம் போன்ற புத்தகங்களே… எதிர்பாரமல் வாசிக்க நேர்ந்த புத்தகமே பனிமனிதன்……..

சிறுவர்களுக்காக எழுதிய புத்தகமே என்றாலும் அனைவருக்குமான கருத்தை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். இடைவிடாமல் படிக்க தூண்டும் வண்ணம் எழுதியுள்ளார். நான் இப்புத்தகத்தை படித்து முடிக்க நான்கு மணி நேரம் மட்டுமே எடுத்துகொண்டேன் அதுவும் என் பேருந்து பயணத்தில்…

அறிவியலுடன் கலந்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளவும் நாம் ஏன் இங்வாறு இருக்கிறோம் என்பதையும் அழகாக குழப்பமே இல்லாமால் புரிய வைத்துள்ளார். சிறிது கற்பனைதிறன் இருந்தால் போதும் நாம் அவ்வுலகில் வாழந்துவிட்டு வரலாம். நம் முன்னோர்களை தரிசிக்கலாம்..

பதின்மூன்று வயதிருக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பரிசளிக்க ஓர் அற்புதமான பொக்கிசம்.. அதற்கு கீழ் வயதுள்ள குழந்தைகளுக்கு நாம் வாசித்து அவர்களுக்கு கதையாக சொல்ல ஓர் அருமையான படைப்பு….

வாழ்க வளத்துடன்

என்றென்றும் அன்புடன்

சூர்யா சம்பத்

(வாசிப்பை நேசிப்போம் குழுமம்)

நான் படிச்ச ஜெயமோகன் கதைகளில் படிக்க மிக எளிதாக இருந்தது இந்த கதைதான். ரெண்டே நாளில் முழுவதுமே படிச்சாச்சு. பரிணாமம் பத்தி மிக சிறப்பா விவரிச்சு எழுதியிருக்கார். புத்தரையும் பனிமனிதனையும் connect பண்ணுனது செம! படித்துமுடித்ததும் ஒருவேளை இதே மாதிரி பனிமனிதன் உயிரோட இருப்பானோ என்று எண்ணம் வருகிறது! ஜெயமோகன் எழுத்தை வாசிக்க ஆரம்பிக்கணும்னா இந்த புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்! முக்கியமா சிறுவர்கள் படிக்கலாம்

ராம் சந்திரன்

முந்தைய கட்டுரைஇலக்கிய ஆணைகள் – கடிதம்
அடுத்த கட்டுரைஏ.கே.செட்டியார்