எழுத்தாளர், இதழாளர், புகைப்படக் கலைஞர், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் ஏ.கே. செட்டியார். தமிழில் பொதுஅறிவு, அறிவியல், பயணம் ஆகியவை சார்ந்த நூல்களை வெளியிட்ட முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக அவர் மதிக்கப்படுகிறார்.
முதன் முதலில் தமிழில் மிக விரிவான ஆவணப் படம் ஒன்றை எடுத்த முன்னோடி ஏ. கே. செட்டியார்தான். காந்தி ஆய்வுகளில் ஏ.கே.செட்டியாரின் ஆவணப்படம் முதன்மையான ஒன்றாகக் கருதப்படுகிறது.